விகடன்
KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மாலை தனியார் மருத்துவமனைக்குச் … Read more
Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்
எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். 53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது ‘நியூரோலிங்க்’ நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறகு, இவர்களுக்கு 2022ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பிறந்தது. தற்போது இவர்கள் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றனர். Discussed with Elon and, in light of beautiful Arcadia’s birthday, we felt … Read more
Haryana: 'நஷ்டமான தொழில்… காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' – சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?
ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அளவு ரூ.1.5 கோடிக்கு எகிறியுள்ளது. என்ன செய்வதென்று தெரியாத ராம்மெஹருக்கு, தான் போட்டிருந்த ஆயுள் காப்பீடு ஞாபகத்திற்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இவருக்குக் கிட்டதட்ட ரூ.1.5 கோடி கிடைக்கும். இதனால் பிளான் ஒன்றைச் செய்துள்ளார். பிளான் படி, தன் சாயலைப் போலவே இருக்கும் … Read more
Delimitation: "அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது" – அண்ணாமலை சொல்லும் காரணங்கள் என்ன?
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. `மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடைபிடித்துவரும் தென்னிந்திய மாநிலங்களில் தற்போதிருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இதனால், நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகள் சார்ந்து குரலெழுப்புவதை மத்திய அரசு நசுக்கப்பார்க்கிறது’ எனத் தென்னிந்திய ஆளுங்கட்சிகள் எதிர்கின்றன. நாடாளுமன்றம் – Delimitation இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு … Read more
Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' – இந்த வார கேள்விகள் இதோ..!
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். … Read more
"What Bro? Why bro? பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைப்பார்?" – விமர்சித்த சரத் குமார்
பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘சமத்துவ மக்கள் கட்சி’யைக் கலைத்துவிட்டு, ‘பா.ஜ.க’ பிரமுகராகியிருக்கும் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார். விஜய் சமீபத்தில் ‘த.வெ.க’ 2ம் ஆண்டு தொடக்க விழாவில், “இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். அதனை மக்கள் நம்பனுமா? ‘What Bro It’s Very Wrong Bro’. இதற்கு நடுவில் நம்ம பசங்க, ‘TVKForTN’ என சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார். ஸ்லீப்பர் செல் போன்று நீங்கள் … Read more
புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?
புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர் அப்பெண் செல்ல வேண்டிய பஸ் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி, பேருந்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டார். தத்தாத்ரேயாவின் புகைப்படம் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று … Read more
Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! – தனுஷ் | Exclusive Update
Dhanush Exclusive பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்க்’ படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ‘இட்லி கடை’ படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன், தமிழரசன் பச்சமுத்து இவர்களில் யாராவது ஒருவரின் படமாக இருக்ககூடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் இந்தியில் நடித்து வருகிறார். டெல்லி படப்பிடிப்பில் ‘இட்லி கடை’ நடிப்பு, இயக்கம் என தனுஷ் இரவு பகல் பாராமல், … Read more
Ooty: ஆங்கிலக் கவிஞர்களின் மனங்கவர்ந்த மஞ்சள் நிற டஃபோடில்ஸ்! – முதன் முறையாக ஊட்டியில் அறிமுகம்
நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஹாலந்து நாட்டு துலிப் மலர்கள் முதல் ‘குயின் ஆஃப் சைனா’ என வர்ணிக்கப்படும் பவுலேனிய பூக்கள் வரை நூற்றுக்கணக்கான மலர் ரகங்களைப் பராமரித்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் மூலம் மலர் நாற்றுகளைத் தருவித்து, இங்கு அறிமுகம் செய்தனர். இன்றளவும் புதிய, புதிய மலர் ரகங்களை அறிமுகம் செய்யத் தோட்டக்கலைத் துறையும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த … Read more