USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' – வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட… உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் கருதுவதாக தெரிகிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிக ஒப்பந்தம் செய்யவும், நட்பு பாராட்டவும் நினைக்கிறார். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ட்ரம்ப் … Read more

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை முழுமையாக இங்கே. Seeman சீமான் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு! சீமான் பேசியதாவது, ‘விளக்கம் கேட்டார்கள். என்னுடைய பதிலை கொடுத்தேன். எதுவும் புதிதில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அடுத்தடுத்த சம்மன்கள் கொடுப்பது அடக்குமுறை, அராஜகம். நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க 3 மாத … Read more

Rambha: டி.வி-யை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கம்பேக் கொடுக்க விரும்புகிறாரா ரம்பா?

பலருக்கும் ஃபேவரிட்டான நடிகை ரம்பா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரபரப்பாக வலம் வந்தவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்திரக்குமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மட்டும் பங்கேற்று வந்தார். அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்களிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டார் ரம்பா. 8 வருட இடைவெளிக்குப் பிறகு `ஜோடி ஆர் யூ ரெடி’ என்ற … Read more

AUS v AFG: குறுக்கிட்ட மழை… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதே சூழலில் மோதிய ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், அதன்பிறகு நிதானமாக … Read more

What to watch on Theatre: சப்தம், அகத்தியா, கூரன் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

சப்தம் (தமிழ்) சப்தம் ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சப்தம்’. ‘ஈரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி – அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமானுஷ்ய புலனாய்வாளர் (paranormal investigator) அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அகத்தியா (தமிழ்) அகத்தியா (தமிழ்) பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’. அர்ஜுன், ராஷி … Read more

Pakistan: “இலவசமாக பயிற்சியளிக்க தயார்; ஆனால் 58 வயதில் என்னால் அவமானப்பட முடியாது" -வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடைபெறும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றிகூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அரங்கேறிய ஐ.சி.சி தொடரில் இப்படியா மோசமாக விளையாடுவது என வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். பாகிஸ்தான் அப்போது, யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், “தொலைக்காட்சி வர்ணனையில் விமர்சிக்காமல் களத்தில் இறங்கி பயிற்சி கொடுங்கள். உங்களுக்கு இம்ரான் கான் இருந்தது போல இன்றைய பாகிஸ்தான் அணிக்கு … Read more

`ரஜினி சாரிடம் எங்க அப்பா சொன்ன வார்த்தை..!' – ஜெயம், எம்.குமரன் ரீரிலீஸ் பற்றி இயக்குநர் மோகன் ராஜா

‘ஜெயம்’, ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரீரிலீஸ் ரவி மோகன் அறிமுகமான ‘ஜெயம்’, ”எம் குமரன் s/o மகாலட்சுமி’ படங்கள் இப்போது ரீரிலீஸ் ஆக உள்ளன. எடிட்டர் மோகன் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயம்’. அதைப் போல 2004-ல் ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ படமும் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது புத்தம் புது பொலிவாக 4 கே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், … Read more

Beavers: அணைக்கட்டிய எலிகள்… எந்த நாட்டில் தெரியுமா?

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில், அரசு ஒர் அணை கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய அனுமதி 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம். ’நீங்க என்ன அணை கட்டுறது; நான் கட்டுறேன் பாருங்கடா’ என்கிற ரேஞ்சில், பல நீர் எலிகள் ஒன்று சேர்ந்து அணை கட்டிவிட்டிருக்கிறது. இதனால், செக் குடியரசுக்கு 1.2 மில்லியன் டாலர் சேமிப்பாகி விட்டதாம். beavers (நீர் எலிகள்) நீர் எலிகள், ஆங்கிலத்தில் பீவர்கள் (beavers) என்று அழைக்கப்படும். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் காணப்படுகின்றன. … Read more

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்… இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' – தேசிங்கு பெரியசாமி

`ஜோ’ படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். யுவன் சார் கொடுத்த ஊக்கம்! தேசிங்கு பெரியசாமி பேசுகையில், “ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யுத்ஃபுல்லாக இருக்கு. படத்தினுடைய டிரெய்லரும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சு. நல்ல வைப் இருக்கு. ரியோவுடைய கலர் எனக்கு ரொம்ப … Read more

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் … Read more