Shyam Benegal: `லெஜண்டுக்கு அஞ்சலி' – 5 தேசிய விருதுகள் வென்ற ஒரே இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் இன்று (23.12.2024) தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார். மும்பையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 6:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்திய திரையுலகிலும் அதற்கு வெளியிலும் முக்கிய ஆளுமையாக திகழும் இவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Shyam Benegal ஷ்யாம் பெனகல் திரைத்துறையில் தனது செயல்பாடுகளுக்காக இந்திய அரசின் பத்ம ஶ்ரீ (1976), பத்ம பூஷன் (1991) ஆகிய விருதுகளைப் … Read more

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தேவையானதா? | விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாள் முதல் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த வேளையில், பா.ஜ.க அரசு `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த மசோதா மீது மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பா.ஜ.க அரசுக்கு கிடைக்கவில்லை. One Nation One Election அதைத்தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய … Read more

Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்…" – தனுஷ் சொல்லியதென்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விடுதலை 2 (Viduthalai 2) திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் அந்தத் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். விடுதலை 2 படத்தில்… அந்தவகையில் நடிகர் … Read more

Viduthalai 2: “12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!'' – ஜெய்வந்த்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடுதலை பாகம் 2′ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் இண்டர்வெல் காட்சியில் வாத்தியார் பண்ணையார்களில் ஒருவரை வெட்டிக் கொல்வார். அந்த காட்சியை `பொறுத்தது போதும்’ பாடல் மெருக்கேற்றியது. அந்த இண்டர்வெல் காட்சியில் பண்ணையாராக நடித்தவர் நடிகர் ஜெய்வந்த். 15 வருடமாக சினிமாவில் நிலையான இடத்திற்காக போராடி வந்த ஜெய்வந்துக்கு இந்த திரைப்படம் ஒரு `Breakthrough’ மொமென்ட்டாக அமைந்திருக்கிறது. `விடுதலை 2′ தொடர்பாக கேள்விகளை முன் வைத்தோம். நெகிழ்ச்சியுடன் … Read more

தேர்தல் ஆணைய விதிமுறைகளில் SHOCK மாற்றம் – காரணம் என்ன? ECI | GST | DMK | BJP | Imperfect show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * பாப்கார்னுக்கு மூன்று வகை ஜி.எஸ்.டி? * பயன்படுத்தப்பட்ட காருக்கான ஜி.எஸ்.டி உயர்வு? * பாகிஸ்தான் எல்லையிலுள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த நிர்மலா சீதாராமன்! * ஐசியூவிலுள்ள முகேஷ், பிராதப்பின் உடல்நிலை எப்படியிருக்கிறது? * மகாராஷ்டிரா வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் ராகுல்! * ராகுலுக்கு சம்மன் அனுப்பிய உ.பி நீதிமன்றம்… ஏன்? * சிசிடிவி, மின்னனு ஆவணங்கள்… தேர்தல் ஆணைய விதிகளில் அதிரடி மாற்றம்! * தேர்தல் ஆணையத்தின் … Read more

Viduthalai 2: `படத்தை கலை வடிவமாக பாருங்கள்!' – அர்ஜூன் சம்பத்துக்கு பதில் கொடுத்த பி.சி ஶ்ரீராம்!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற `விடுதலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் தொடர்பாக இந்து மக்கள் மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது “உபா” பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீதும். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த … Read more

`5, 8-ம் வகுப்புகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது' – No-detention Policy-யை ரத்து செய்த மத்திய அரசு

பள்ளி கல்வியில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையான no-detention policy-யை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படாமல் அதே வகுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. School Student கல்வி உரிமைச் சட்டத்தில் (Right to Education Act) 2019-ல் … Read more

12 அடி உயரம்; ஆண்டு முழுவதும் அறுவடை; ஆர்கானிக் கொடி தக்காளி – எப்படி வளர்ப்பது?

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தேவ் என அழைக்கப்படும் தேவ குமார். அடிப்படையில் பாதுகாப்புத்துறை மாணவர். விவசாயக் குடும்பப் பின்னணி மற்றும் இயற்கை விவசாய ஆர்வம் காரணமாக 17 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் அர்ப்பணிப்புடன்‌ ஈடுபட்டு வருகிறார். குன்னூரில் உள்ள `செர்ரி பெர்ரி’ என்ற தனியார் பண்ணையில் வேளாண் சுற்றுலா மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கொடி தக்காளி பண்ணையில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் ஆர்கானிக் பசுமைக் குடில் அமைத்து … Read more

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அறுவடை இயக்கம்… அழித்தொழித்தல்… தமிழரசன்| அத்தியாயம் 15

தமிழ்நாடு விடுதலைப்படை… அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், ‘விடுதலை பாகம் 1’ மற்றும் ‘பாகம் 2’ திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980’களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, … Read more