உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு விடிவெள்ளி தெரிகிறது. உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுக் கொண்டிருந்த  மாணவர்களுக்கு, தங்கள் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. உக்ரைனில் இருந்து திரும்பிய 2000 இந்திய மாணவர்கள் எங்கே படிப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. உக்ரைனில் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவில் அல்ல, மற்றொரு வெளிநாட்டில் தங்கள் படிப்பை படித்து முடிப்பார்கள். மருத்துவ மாணவர்கள் … Read more

Biggboss Tamil: வளர்ப்பு பற்றி பேசி தீயை கொளுத்தி போட்ட ஜிபி முத்து: புகையும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் ஆரம்பமே அதளக்களமாக ஆரம்பித்திருக்கிறது. வழக்கமாக வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களுக்கு ஓரிரு நாட்கள் ரிலாக்ஸ் டைம் கொடுப்பார்கள். ஆனால் இந்தமுறை அவையெல்லாம் கொடுக்கப்படவே இல்லை. வந்தவுடனேயே, போட்டியாளர்களை கவர்ந்தவர்கள் யார் என ஒவ்வொருவரிடமும் கேட்ட பிக்பாஸ், குறைவான வாக்குகளை பெற்றவர்களை பிக்பாஸ் வீட்டின் வெளியே வாழைப்பழ பெட்டி படுக்கையில் இரவு முழுவதும் படுக்க வைத்தார் பிக்பாஸ். விக்ரம், ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி ஆகிய 4 பேரும் முதன்முதலாக தண்டனையில் சிக்கினர். மேலும் நேரடியாக … Read more

சீனாவில் ஜி ஜிங்க்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! 14 லட்சம் பேர் கைது!

பெய்ஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. ‘சர்வாதிகாரியை அகற்று’ என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் நிலையில் இதுவரை 14 லட்சம் கைது செய்யப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு எதிராக அசாதாரண ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் பல இடங்களில் ஜின்பிங்கிற்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த அதிபர் தேர்வுக்கான CPC பொதுக்கூட்டம் பெய்ஜிங்கில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற … Read more

விளையாட்டிலும் மனிதனை விஞ்சும் ரோபோ! கூடைப்பந்து விளையாட்டில் Robot கின்னஸ் சாதனை

தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆச்சரியம் தருபவை என்றாலும், விளையாட்டு வீரராக ரோபோ உருவாக்கும் முயற்சியின் வெற்றி அதிசயமாக இருக்கிறது. கூடைப்பந்து விளையாடி கின்னஸ் சாதனை படைத்த ரோபோ இப்போது டிரிப்பிள் செய்ய கற்றுக்கொள்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. தொடர்ந்து 2,000 ஷாட்களுக்கு மேல் அடித்த உலக சாதனையை இந்த ரோபோ வைத்துள்ளது. ஷூட்டிங் ஹூப்ஸ் டிராய்டுக்கான பூங்காவில் நடப்பதாக மாறியதற்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்படுகின்றன. டொயோட்டா இன்ஜினியரிங் சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்பின் AI கருப்பொருள் நிகழ்வு, இந்த … Read more

எரிபொருள் மீதான வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும்: நிர்மலா சீதாராமன்

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய் நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான … Read more

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை? வெளியான முக்கிய தகவல்!

மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை: ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிற வகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும், கோரிக்கைகளுக்கு எழுந்த பிறகு, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே … Read more

ஈழ சொந்தங்களுக்கு தரமற்ற குடியிருப்பு – சீமான் கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேலூர் மாவட்டம், மேல்மொனவூரில் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் சிறிதும் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. நம்பிக்கையோடு நம்மை நாடி வந்த நம் இரத்தச் சொந்தங்கள் என்ற உணர்வு அணுவளவுமின்றி, வாழ வழியற்று வந்த அகதிகள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையே, தரமற்ற வீடுகளைக் கட்ட அனுமதித்ததற்கு முக்கியக் காரணமாகும். ஆடு, மாடுகளை அடைக்கும் பட்டிகளைவிட மிக மோசமான முறையில் குடியிருப்புகள் கட்டப்படுவதைக் … Read more

பழங்குடி இனத்தவர் உயிரிழப்பு… விதி இருந்தும் கொடுக்கவில்லை; அதனால்தான் இந்தத் தற்கொலை – ராமதாஸ் காட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. வேல்முருகனுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு சாதி சான்றிதழ் பெற வேல்முருகன் தொடர்ந்து முயற்சித்ததாகவும் ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே,அவர் சார்ந்த சமூகத்திற்கு தமிழகம் முழுவதும் சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்தச் சூழலில்  சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் … Read more

Mee Tooவை புறந்தள்ளிய மலையாள நடிகை… பரவசமான கவிப்பேரரசு வைரமுத்து

தமிழ் சினிமா பாடலசாரியர்களில் வைரமுத்து மிக மிக முக்கியமானவர். ரஜினிகாந்த், விஜயகாந்த் எப்படி சினிமாவுக்குள் வந்து ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளேட்டை உடைத்தனரோ அதேபோல் வைரமுத்து பாடல்கள் எழுத வந்து பாடல்களுக்கான டெம்ப்ளேட்டையும் மாற்றிவைத்தார். வைரமுத்து வந்த பிறகுதான் புதுக்கவிதைகள் பல பாடல்களாக மாறின. அதுமட்டுமின்றி வாலியும்கூட தன்னுடைய ஸ்டைலை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், வைரமுத்து – இளையராஜா – பாரதிராஜா கூட்டணி தமிழ் சினிமாவின் விலை மதிக்கமுடியாத கூட்டணி என்றே … Read more

டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது: IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஆலிவர் கோரிஞ்சஸ், டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கை நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.  இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை  சமாளிப்பதிலும், எளிதாக திட்டங்களின் பயன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும், இந்திய அரசாங்கத்திற்கு சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றிப் பேசிய கோரிஞ்சஸ், “டிஜிட்டல்மயமாக்கல் பல அம்சங்களில் உதவியாக உள்ளது. … Read more