சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு போலி செய்தி வெளியிட்டவருக்கு $965 மில்லியன் அபராதம்

வாட்டர்பரி: போலிச் செய்திகள் தொடர்பாக அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவருக்கு, $965 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79,39,49,40,750 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2012ம் ஆண்டில் நடைபெற்ற சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அமல்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட அரசாங்கத்தின் சதி என்று அலெக்ஸ் ஜோன்ஸ் தனது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அந்தத் தாக்குதல் 100 … Read more

இந்த தீபாவளி நம்மள்து! தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு விஜய் பட அப்டேட்கள்!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ள படம் ‘வாரிசு’, தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, எஸ்.ஜே.சூர்யா, ஷாம் மற்றும்  யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.  ‘வாரிசு‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படம் விரைவில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகிறது.  வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார், … Read more

தனியாரில் வேலைவாய்ப்பு… தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம் இயற்றுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வேலைக்கு மட்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் … Read more

சைபர் கிரைம்: மொபைல் செயலி மூலம் முதலீடு என்ற பெயரில் ரூ.903 கோடி மோசடி!

மொபைல் செயலி மூலம் நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் சீனா மற்றும் துபாயில் இருந்து செயல்படும் மோசடி கும்பலை ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. இந்த கும்பல் இதுவரை நாடு முழுவதும் சுமார் ரூ.903 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த சீனக் குடிமக்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடையவர்களை முழுவதுமாக கண்டறிய டெல்லி மற்றும் பல இடங்களில் இயங்கும் கால் … Read more

திருநங்கை மீது தாக்குதல்…. நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை உறுதி

திருநங்கைகள் தற்போதைய நவீன உலகத்திலும் தீண்டாமையையும், பிறரின் ஏளனப்பார்வையையும் பேச்சையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வீட்டால் ஒதுக்கப்பட்டவர்களை சமூகமும் ஒதுக்கும் அவலம் நடந்துகொண்டே இருக்கிறது. திருநங்கைகளும் நம்மைப்போல் அனைத்தும் இருக்கும் உயிர்தான் என்ற நினைப்பு தற்போதும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. ரயில்களில், பொது இடங்களில் ஒதுக்கப்படும் அவர்கள் தீவிர மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் இந்த ஆரோக்கியமற்ற போக்கை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதே சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் … Read more

அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்… கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.  இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் ‘போர் தூண்டி விடும் உயர மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனத்துடன் இணைத்து, தங்களுக்குள் சண்டையிட்டு, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என்றும் துளசி கூறியுள்ளார். மற்ற … Read more

பருவமழையை சமாளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வந்த வெள்ள நீரால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது. அதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து  மழை நீரால் பாதிக்கப்பட்ட  பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50 க்கும் மேற்பட்ட வட மாநில  மக்களை நேரில் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு  தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.  … Read more

2023ல் எத்தனை நாள்கள் பொது விடுமுறை?… அரசு வெளியிட்ட பட்டியல்

தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, … Read more

தல, தளபதி கூட்டணி உறுதி?… வெளியான தகவல்; ரசிகர்கள் உற்சாகம்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தின் பணிகளில் நடிகர் விஜய் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார்.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்  ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா போன்ற பலர் நடித்து வருகின்றனர். வாரிசு படம் பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வந்தாலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்: 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது … Read more