சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை: நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்த வேல்முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் நேற்று மதியம் தீக்குளித்தார் வேல்முருகன். நேற்று மதியம், திடீரென ஒரு நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டே ஓடி வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை … Read more

Biggboss6Tamil: பிக்பாஸ் வீட்டின் முதல் குறும்படம் வைரல்; கமல்ஹாசன் ரியாக்ஷன்

பிக்பாஸ் தமிழ் 5 சீசன்களைக் கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ஜிபி முத்து உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பமே அதிரடியாக டாஸ்குகளை கொடுத்து, வீட்டில் பரபரப்பாக வைத்திருக்கும் பிக்பாஸ் நாள்தோறும் புதுபுது கேம்களை கொடுத்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். இதனால், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் கடந்து வந்த பாதை டாஸ்கை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு முழுமையாக போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் சொல்லாமல் சொல்லிவிட்டார் … Read more

Dangerous Snake: உலகின் மிக ஆபத்தான ஐந்து பாம்புகள் இவைதான்..

Five Dangerous Snakes List: பாம்பு மிகவும் பலவீனமானது. ஆனால் அது கடித்தால் மரணம் கூட ஏற்படலாம். அதனால் தான் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் பயப்படுவார்கள். பலர் பாம்புகளின் படங்களை பார்த்துவிட்டு தூக்கும் போது கனவில் கூட பயப்படுவார்கள். பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். உலகில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆனால் பாம்பு அதுவாக … Read more

வாடகை தாய் சர்ச்சை : …சட்டப்படி தண்டிக்க வேண்டும் – நடிகையை தாக்கிய 'பிக்பாஸ்' வனிதா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.  திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. … Read more

'வந்த வழியே திரும்பி செல்லுங்கள்' – ஆர்எஸ்எஸ்-க்கு எச்சரிக்கை விடுத்த திருமா!

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக். 11) மாலை நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்த பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் … Read more

RSS அமைப்புகள், அமைப்புகள் அல்ல. நாசக்கார சக்திகள் -துரைவைகோ கடும் விமர்சனம்

MDMK Warns Hindi Imposition: இந்தி திணிப்பில் ஒன்றிய அரசின் அணுகுமுறை தொடர்ந்து இருந்தால் கடந்த 1965 இல் மொழிப்போர் நடந்ததை விட வீரியமிக்க மொழிப்போராக இந்தி ஆதிக்கத்தையும் இந்தி திணிப்பையும் எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ எச்சரித்துள்ளார். இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள தேரடி வீதியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ கலந்து … Read more

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் காரிடாரை திறந்து வைத்தர் பிரதமர் மோடி!

ஆன்மீக  நகரமான உஜ்ஜயினியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11, 2022) தொடங்கி வைத்தார். ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவியும் நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்கங்களில்’ ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித  இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘ஸ்ரீ மஹாகால் லோக்’ என்று அழைக்கப்படும் வழித்தடத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் கோவிலில் பூஜை செய்தார். மோடி, பாரம்பரிய … Read more

கேன்சருக்கு பலியான 10 வயது நடிகர் – ஆஸ்கருக்கு சென்ற படத்தில் நடித்தவர்!

2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ‘செல்லோ ஷோ’. குஜராத்திய திரைப்படமான இதில், கோலி எனும் 10 வயது சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில், அந்த சிறுவன் கடந்த அக். 2ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரே, அந்த சிறுவன் நீண்ட நாள்களாக லுகேமியா எனும் ரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இதில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

பாகிஸ்தானை மிரட்டும் மலேரியா… இந்தியாவிடம் இருந்து கொசு வலைகள் வாங்க திட்டம்!

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழை ஏற்பட்டத்தை தொடர்ந்து பாக்கிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்; 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் . நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்நிலையில், செப்டம்பரில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ள பாதிப்பு காரணமாக மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு பெருமளவு அதிகரித்து  “இரண்டாவது பேரழிவை” ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள 32 மாவட்டங்களில் … Read more

சமவெளி மிளகு சாகுபடி: ஏக்கருக்கு 2 லட்சம் கூடுதல் வருமானம் அசத்தும் பொள்ளாச்சி விவசாயி

விவசாயத்தில் பல புதிய உத்திகளைக் கையாண்டு, லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கியிருக்கிறார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில்முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். இவர் பலரும் செயல் படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டவர். பொள்ளாச்சி மாவட்டம், ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன்புதூரில் 26  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது இவர் பண்ணை. பெரும்பாலனவர்கள் ஒற்றை பயிர் முறையை பின்பற்றும் சூழலில் … Read more