நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய போட்டியாளர்கள்: முதல் நாளே ஆப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் … Read more

தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?

PM Modi Visit Tamil Nadu: தமிழகத்துக்கு வரும் 30 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30 ஆம் தேதி  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 30 … Read more

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்த யுயு லலித்

DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டின் பெயரை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த நாள் (நவம்பர் 9 ஆம் தேதி) நீதிபதி சந்திரசூட் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் … Read more

ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?

India vs Russia at UN: ஐநாவில் உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எனினும், ‘போர்’ என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் … Read more

குப்பை கொட்டினால் அபராதம்! அபராத பலகை முன்பே குப்பை கொட்டிய மக்கள்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் 10 ஆம் தேதி முதல் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால், காட்பாடி தாராபடவேட்டில் மாநகராட்சி அறிவிப்பு போஸ்டரின் எதிரில் குப்பை கொட்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை … Read more

த்ரிஷாவிற்கு திருமணம்! எப்போது தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா, இன்றுவரை தனது திகட்டாத அழகாலும் இளமையாலும் ரசிகர்களை தன்வசம் வைத்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.  சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் த்ரிஷா ஆர்வம் காட்டி வருகிறார்.  மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்களுடன் த்ரிஷா நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் … Read more

CBI: திமுகவின் ஏ ராஜாவுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான  ராஜா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், … Read more

7TH PC: இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர்ந்தது

7th Pay Commission: சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை அடுத்து, இந்த டி.ஏ உயர்வை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் வராத நிலையில், வேறு ஒரு மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.  மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்கு … Read more

இந்திய சினிமாவில் முதன்முறையாக… மைக் மோகன் திரைப்படம் சாதனை

கோயம்புத்தூர் எஸ்.பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘பவுடர்’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை தியாகராய நகரில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழாவில் ‘ஹரா’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவை ஹரா படக்குழு இணைந்து … Read more