NRI Rights: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கேட்டு கையெழுத்து இயக்கம்

NRI Voting Rights: வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் தொண்டியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்திரலிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி இடம் வழங்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர். … Read more

'ஆயிரத்தில் ஒருவன்' படம் பற்றி அதிர்ச்சியான உண்மையை வெளியிட்ட செல்வராகவன்!

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர், இயக்குனரான இவர் தற்போது நடிகராகவும் அவதாரமெடுத்துவிட்டார். இவரின் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தனது சகோதரன் தனுஷுடன் மீண்டும் இணைந்து நானே வருவேன் என்கிற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை வரவேற்பு உள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்த … Read more

Duvalius Dokovici: சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா

Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர். இந்தப் பூச்சியானது தரை வண்டுகளின் டுவாலியஸ் வகையைச் சேர்ந்தது. ஏன் வண்டுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது என்று அனைவருக்கும் கேள்வி எழுகிறது. அதற்கான விளக்கத்தையும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர். பூச்சியின் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. டுவாலியஸ் டோகோவிசி (Duvalius Dokovici) என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், டென்னிஸ் நட்சத்திரம் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக அறியப்படுபவர் … Read more

Video: அய்யோ…பாவம்! லாரியில் பலமாக மோதிய காண்டாமிருகம் – சாலையில் சரிந்து விழுந்தது!

இந்தியாவில் புலி, காண்டாமிருகம் போன்ற பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கின்றன. இதுபோன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளுக்கு என பாதுகாப்பட்ட பகுதியை அமைத்து, பல்வேறு சூழலியல் சார்ந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், அசாம் மாநிலத்தின் அதிகம் காணப்படும் காண்டாமிருகங்கள் வசிக்கும் வனப்பகுதியை காசிரங்கா தேசிய பூங்காவாக அரசு பாதுகாத்துவருகிறது. காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை தடுக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வனத்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் இதில் பங்காற்றுகின்றன. இந்நிலையில், காசிரங்கா தேசிய … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் : 'பெற்றோர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' – சமீபத்தில் குழந்தைபெற்ற நடிகை வாழ்த்து

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.  திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. … Read more

கொலுசுக்காக பாதங்களை துண்டாக வெட்டிய கொடூரம் – 108 வயது பாட்டி என்றும் பாராமல்…

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (அக். 9) ஒரு கொடூர திருட்டுச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரின் பாஸ் படன்புரா மீனா காலனியின் 108 வயதான மூதாட்டி ஒருவர் மகளுடன் வசித்து வந்தார்.  அவரது மகள் நள்ளிரவில் கோயிலுக்கு சென்றால், அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அவரது மகள் ஜமுனா தேவி வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் அருகிலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தாயை அவர்   கண்டெடுத்துள்ளனர். அவரின் இரண்டு கால் … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் – விக்னேஷ் சிவன் போட்ட பதிவு… திணறும் சோஷியல் மீடியா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத நயன் தன் உழைப்பால் தற்போது நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார். கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் … Read more

கைது அடக்குமுறைகளை கைவிடுங்கள் – அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் சீமான்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பணி நீக்கம் செய்ததை எதிர்த்து அறவழியில் போராடிய அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை நள்ளிரவில் காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ள தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள 52 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த பகுதிநேர விரிவுரையாளர்களைத் தொகுப்பூதியம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது அவர்களது … Read more

வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அதிரடி உத்தரவு!

வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது, இப்போதெல்லாம் யாருமே மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை.  பைக், கார், பேருந்து போன்ற வாகனங்களை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற வாகனங்கள் ஒருபுறம் நமக்கு சௌகரியத்தை கொடுத்தாலும் மறுபுறம் இது நம்முடைய சுற்றுசூழலுக்கு முழுக்க முழுக்க தீங்கினை விளைவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நமது வளிமண்டலம் மாசடைகிறது, நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  … Read more

'என்னை தூங்க விடுங்கப்பா'… தூக்கம் இழந்த மு.க. ஸ்டாலின்… கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்

திமுகவின் பொதுக்குழு இன்று சென்னை அமைந்தகரையில் நடந்தது. இதில் மு.க. ஸ்டாலின் போட்டியின்றி அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கிறார். அதேபோல், மகளிரணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுக்குழுவில் பேசிய அவர், “மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்; மழை அதிகமாக … Read more