'2671ஆம் ஆண்டில் இருந்து வருகிறேன்… பூமியின் தலையெழுத்தே மாறப்போகிறது' – ஏலியன்கள் படையெடுப்பா?

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கடிக்கணக்கான தகவல்களில் பெரும்பாலானவைக்கு எந்தவித ஆதாரங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை. சமூக வலைதளங்களில் கூட திடீர் திடீரென நம்ப இயலாத பல தகவல்களும், செய்திகளும் உலா வருகின்றன. ஆன்மீகம் தொடர்பாக இருக்கட்டும், தேசிய பிரச்சனையாக இருக்கட்டும் உண்மைத்தகவல்களுடன் பல பொய் தககவல்களும், ஆதாரங்களற்ற தகவல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக, ஏலியன்கள் குறித்த தகவல்கள், ஏலியன்கள் பூமியில் வசிப்பது போன்றவையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புகின்றன. அந்த வகையில், ட்விட்டரில் இதுபோன்ற ஒரு வீடியோ … Read more

நான் இந்து அல்ல ஆனால்… ராஜமௌலியின் புதிய விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது.  வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படம் வெளியான … Read more

2026இல் தான் மதுரை எய்ம்ஸ் வேலை முடியுமா? மத்திய அமைச்சரின் தகவல் கொடுக்கும் கவலை

தர்மபுரி: 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் “தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம். மத்திய அரசு … Read more

பள்ளி மாணவிகளுக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம்… புயலை கிளப்பிய விவகாரம்!

டென்மார்க் ஆக்கிரமித்துள்ள கிரீன்லாந்தின் 60ம் ஆண்டுகளில், அங்குள்ள பூர்வ குடி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 13 வயது சிறுமிகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட சம்பவம் வெளியாகி, அந்நாட்டில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் மருத்துவர்கள் கிரீன்லாந்தின் இன்யூட் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பூர்வ குடி மக்களுக்கு குழந்தை பிறப்பதைத் தடுப்பதற்கும் கருத்தடை சாதனங்களை (IUS) பொருத்தினர். இதற்கு சில பெண்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம், டென்மார்க் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹூனிக் … Read more

'கனிமொழிக்கு வாழ்த்துகள்…ஆனால்' – தமிழிசை கடும் விமர்சனம்

சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தா மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தெலங்கான மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். விருதுகளை வென்றவர்கள் அவர் விருது வழங்கி சிறப்பு செய்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், “குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளி பாட நூல்களிலும் தற்காப்பு கலை குறித்து தகவல்கள் இடம்பெற வேண்டும். ஆண் குழந்தைகள், … Read more

100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்

சீரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கும் நிலையில், சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் மோகன்ராஜா படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பிருத்திவிராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக் தான் இந்த காட்ஃபாதர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஆந்திரா, தெலங்கான மற்றும் பாலிவுட்டில் … Read more

வள்ளுவம் வாழ்வியலுக்கானது – ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்

சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony’) என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்து கடும் … Read more

ரயிலில் 'அந்தரங்க சேவை' – டிக்கெட்டை பார்த்த பயணி அதிர்ச்சி; என்ன நடந்தது?

புதிய ரயில் சேவையோ அல்லது புதிய ரயில்களோ இணையத்தில் அடிக்கடி வைராலகும். ஆனால், சமீபத்தில் ரயிலின் டிக்கெட் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதிலும், டிக்கெட்டின் விலையோ அல்லது டிக்கெட்டின் வடிவம் குறித்தோ இல்லை, டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகம்தான் அந்த வைரலுக்கான காரணம்.  ‘ஏசி வசதியுள்ள முதல் வகுப்புகளில் பாலியல் சேவை அளிக்கப்படும்’ என்ற அந்த வாசகம் அடங்கிய டிக்கெட் தான் நெட்டிசன்களால் அதிகம் பரபரப்பட்டு வருகிறது. அதே ரயில் நிலையத்தில் … Read more

முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி

புதுடெல்லி: முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். தேவையில்லாத டென்ஷன் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய அவர், எங்கள் மக்கள் தொகை குறைகிறது என்று கூறுகிறார். முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் அதிக இடைவெளி விடும் விஷயத்தில் இஸ்லாமியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். ‘ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர் யார்? முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், இது குறித்து மோகன் பகவத் பேச மாட்டார் … Read more

தளபதி 67 அப்டேட் வெளியாகும் தேதி இதுதான்; விக்ரம் பிரபலம் கொடுத்த சரவெடி அப்டேட்

வாரிசு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தைக் காட்டிலும் அடுத்ததாக உருவாக இருக்கும் தளபதி 67 படம் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தளபதி 67 படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் என்றாலும், இது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எபோபது தளபதி … Read more