யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்; NIA தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு   காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முக மூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்தி, முக மூடி மற்றும் … Read more

ஆஸ்திரேலியாவின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற இந்திய மாணவிகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் பிரீமியர் விருதை வென்று இந்திய மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர். 2021-22ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் என்ற விருதை திவ்யங்கனா ஷர்மா என்ற இந்திய மாணவி வென்றுள்ளார். இதே கல்வி ஆண்டில் ஆராய்ச்சி பிரிவில் சிறந்த மாணவர் விருதை வென்றார் ரித்திகா சக்சேனாப் என்ற இந்திய மாணவி. இந்த விருதுகள் விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களை பாராட்டும் விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இதில் ரித்திகா தனது 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், இப்போது ஸ்டெம் … Read more

Watch: 'ஜெய் ஸ்ரீராம்' – வாள், துப்பாக்கியுடன் தசரா கொண்டாட்டம்; உ.பி.,யில் பாரம்பரியமா?

நாடு முழுவதும் நவராத்திரி (அ) துர்கா பூஜை பண்டிகை கடந்த 10 நாள்களாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்களும், வெவ்வேறு சடங்குகளும், வித்தியாசமான கொண்டாட்டங்களும் உள்ளன. பெரும்பாலும், பெண் தெய்வங்களின் ஒன்பது அவதாரங்களை கொண்டாடும் நோக்கிலும், ராவணனை ராமர் வதம் செய்ததை கொண்டாடும் வகையிலும் இந்த நவராத்திரி (அ) துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவடத்தில் நடைபெற்ற தசரா ஊர்வலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  … Read more

TN Weather Forecast: உஷார் மக்களே!! இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை பெய்யும்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 07.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more

நகைச்சுவை நடிகரை ஏமாற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் கைது

தமிழ் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த போண்டாமணி என அழைக்கப்படும் கோடீஸ்வரன், சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருகிறார், கடந்த வாரம் போண்டா மணி உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்த பின்னர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவர் போண்டாமணியிடம் வந்து நலம் விசாரிப்பது போல் நெருக்கமாக பழகி உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார், … Read more

புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில், 550 ஆண்டுகள் பழமையான மதரஸாவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வழிபாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் தற்போது காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, … Read more

பிக் பாஸில் கலந்துகொள்ளும் புது முகங்கள்: இதோ விவரம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு … Read more

கழிப்பறை இல்லாததே பெண் கல்விக்கு முக்கியத் தடை: தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு

கோவை: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார். அங்கு நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழிசை செளந்தர்ராஜன், ‘பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நிறுவனர் அவிநாசிலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு … Read more

சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவன சந்தை மதிப்பீடு 2022ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்தில்,கடந்த மே மாதம் முதல் புதிய ஆட்சேர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனம் சத்தம் இல்லாமல் பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயல்திறன் மோசமாக உள்ளதாக கருதப்படும் ஊழியர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் … Read more

உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா!

Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும், கிழக்கு லடாக்கில் மோதி வருகின்றன. எல்லையில் ஆயுதங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களும் எப்போதும் மோதலுக்கு தயாராக நிற்கும் நிலையும், இந்தியாவை அவமானப்படுத்தும் வாய்ப்பை ஒருபோதும் சீனா தவறவிட்டதில்லை என்பதும் சரித்திரம். ஆனால், இந்த மிகப்பெரிய கருத்து வேறுபாடுகளுக்கும், பிணக்குகளுகும் … Read more