'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: இணையத்தில் அதிரடி வரவேற்பு

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’ ஆகும். இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, … Read more

Video: கர்ப்பிணி என்றும் பார்க்காமல்… கதறும் சின்னதிரை நடிகை – கணவர் மீது குற்றச்சாட்டு

பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வருபவர் நைனா முகமது. இவர் தனது பெயரை அரணவ் என மாற்றிக்கொண்டு பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் திவ்யா ஸ்ரீதர் என்ற  தொலைக்காட்சி நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார். திவ்யா ‘கேளடி கண்மணி’, ‘மகராசி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர்.  ‘கேளடி கண்மணி’ தொடரில் இருவரும் ஒன்றாக நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அரணவ்வை திவ்யாவும் காதலித்துள்ளார். இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் … Read more

பொன்னியின் செல்வனின் வேகமான சாதனை – ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலா?

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.  தொடர் விடுமுறை தினங்களால், பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பலர் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி இயக்குநர் … Read more

கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி; சிகிச்சையில் 11 பேர் – விசாரணை குழு அமைப்பு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று (அக். 6) காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த உணவை உண்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவு கெட்டுப்போயிருந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், சிகிச்சை பலனின்றி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த உணவை … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, கடந்த 30-ம் தேதியில் இருந்து கர்நாடகாவில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.  தசரா திருவிழாவுக்காக அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டு ஓய்வெடுத்தார். அவரைக் காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில … Read more

2048 வீரர்கள்.. 121 பல்நோக்கு மையங்கள்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்

Weather Update in Tamil Nadu: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 2048 பேரிடர் மீட்பு வீரர்கள் தயாராக உள்ளனர் மற்றும் மழை மட்டுமின்றி புயலினை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை எழிலகத்தில் உள்ள … Read more

சிக்கல் சிங்கார வேலனை தரிசித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன்

சென்னை: சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான காசி விஸ்வநாதன் சண்முகம் தற்போது சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகம் வருகை தந்துள்ளார். குறிப்பாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி  விஸ்வநாதன் சண்முகம் ஒரு முருக பக்தர் ஆவார். ஆண்டுக்கு இரு முறை தமிழகம் … Read more

உலகின் மிக வயதான நாய் மரணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்த நாயை, பாபி – ஜூலி என்ற தம்பதி பெப்பிள்ஸ் என பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர்.  உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி – ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர். மேலும் படிக்க | Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 … Read more

Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், மெர்சிட் கவுண்டி என்ற இடத்தில், இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை, அதன் தாயார் ஜஸ்லீன் காவ் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமந்தீப் சிங் (39)ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று (அக். 3) ஒருவரால் கடத்தப்பட்டுள்ளனர்.  அவர்களை துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்து ஒருவர், கடத்திச்செல்லும் சிசிடிவி காணொலி போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த காணொலி வெளியாக … Read more

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு: தமிழிசை சௌந்தராஜன்

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கின்றது எனவும் இருளில் முழ்கவில்லை என தெரிவித்தார்.4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது எனவும் சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில் மாற்று நடவடிக்கை எடுத்து … Read more