புதுசு புதுசா யோசிக்கிறாங்க! பேருந்து பின்னால் ஸ்கேட்டிங் செய்த நபர்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில்  கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.  சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் … Read more

இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ராசாயனங்கள் ஆபத்தானவை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துகள், கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த மருந்தை குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இருப்பதால், மருத்துவ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று WHO வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டைரக்டர் … Read more

நானே வருவேன் கதை தனுஷ் எழுதியதா? உண்மையை கூறிய செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.  தனுஷின் சகோதரரும், இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருந்த ‘நானே வருவேன்’ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய கலவையான விமர்சனத்தை பெற்றது.  காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் … Read more

Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில், துர்கா சிலை கரைக்கும் போது பெரும் விபத்து நடந்துள்ளது. நீரில் சிலைகளை கரைக்குக்ம் போது, ​​மால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட மக்கள் அலறி கூச்சலிட்டனர். தண்ணீரில் தத்தளித்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றுமாறு அலறினாலும் பலர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கியதுடன், சிலை கரைக்க வந்தவர்கள் … Read more

ஆந்திராவை மிரட்டும் காட் ஃபாதர்… பொன்னியின் செல்வனால் பதுங்கல் – தமிழ்நாட்டில் எப்போது?

நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லால் நடித்த திரைப்படம் ‘லூசிபர்’. 2019ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியாவின் பல இடங்களிலும் ஹிட் அடித்தது. பிருத்வி ராஜ், டோவினோ தாமஸ், விவேக் ஓப்ராய், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்திருந்தனர்.  இதை தொடர்ந்து, இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீ-மேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான மோகன் ராஜா இயக்கினார். சிரஞ்சீவியின் 153ஆவது திரைப்படமான … Read more

தாராள பிரபுவுக்கு திருமணமா…! கண்ணீர் வடிக்கும் சாக்லேட் பாய் நடிகரின் ரசிகைகள்

நடிகர் ஹரீஷ் கல்யாண் பல ஆண்டுகளக தமிழ் சினிமாவில் இயங்கி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ உள்ளிட்ட திரைப்படங்கள் பலத்த வரவேற்பை பெற்றது.  தொடர்ந்து, அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் எழுந்தது. குறிப்பாக, இளம்பெண்கள் மத்தியிலும் அவருக்கு கிரேஸ் அதிகமிருந்தது. இந்நிலையில், ஹரீஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த … Read more

'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்… ஆனால்' – நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன்

முன்னாள் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தது, சட்ட விரோதமாக பின்தொடர்ந்தது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்ளுக்காக டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜஸ்மீட் சிங் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், அந்த குற்றஞ்சாட்டப்பட்டவரும், வழக்கு தொடர்ந்து பெண்ணும், கணவன்-மனைவி என்றும் பின்னர்,  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்தார். மேலும், இந்த … Read more

முடிந்தது விடுமுறை – சென்னைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

வார இறுதி, காந்தி ஜெயந்தி, சரஸ்வதி, பூஜை, விஜய தசமி என அக்டோபர் மாத தொடக்கமே பலருக்கும் தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உள்பட பலருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.  அதுமட்டுமின்றி, நீண்டு விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறைகள் நிறைவடைவதால், அவர் மீண்டும் தாங்கள் … Read more

ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையும், தவறான புரிதல் என்பது பொதுவாகவே இங்கு பலரிடத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக, மூக்கு சரியில்லை, உதடு பெரிதாக இருக்கிறது, கை விரல்கள் வித்தியாசமாக உள்ளது போன்ற கருத்துகளை கூறுபவர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  இதை சரிசெய்வதாக கூறி பலரும் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர். முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போன்று மருத்துவர்களின் ஆலோசனைபடியும், மருத்துவர்கள் ஆலோசனையில்லாமலும் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டும் என நோக்கத்தில் 35 வயதான தாய்லாந்தைச் … Read more

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உதவி காசாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சத்தியநாராயணன்.  இவர், கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டுகளுக்கு இடையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் … Read more