உத்தரகாசியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 21 பேரைக் காணவில்லை!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களுக்கு வழக்கமாக பயிற்சி அளிக்கப்படும் திரௌபதி கா தண்டா (DKD) என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டேனிரிங் நிறுவனத்தில் பயிற்சி பெறும் 29 பேர் பயிற்சிக்கு சென்றனர். இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேரைக் காணவில்லை. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி மீட்புப் பணியை துரிதப்படுத்த ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். … Read more

நான் காவி சேலை கட்டினால் உங்களுக்கு என்ன?… குஷ்பு ஆவேசம்

கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஒன் வே. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இவ்விழாவில் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் எழில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். … Read more

இராஜேந்திரசோழன் தமிழர்! இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவளிக்கும் கருணாஸ்

சென்னை: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கருணாஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பேசியதை சுட்டிக் காட்டி தனது ஆதரவை தெரிவித்தார். வெற்றிமாறன் தெரிவித்த இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது என்று கருணாஸ் தெரிவித்தார்.  “கலையை இன்று நாம் … Read more

மருந்து தட்டுப்பாடா இல்லையா?… மாற்றி மாற்றி பேசிய அமைச்சர்கள்

வேலூர் மாவட்டம் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவர சொன்னார். ஆனால், பாம்பு கடிக்கு மருந்தில்லை எனவும், ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது எனவே இங்கு வந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஆரம்ப … Read more

Investment: இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பமா? NRIகளுக்கான இந்திய சட்டங்கள் இவை

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு சொத்தை வாங்க ஆர்வமுள்ள, ஆனால், இந்திய குடியுரிமை இல்லாத இந்தியர் (NRI), தங்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை அறிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து வாங்கத் தடை இல்லை என்றாலும், அவரது சொத்து முதலீடு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) விதிகளின்படி செய்யப்பட வேண்டும். இந்த  ஃபெமா விதிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் (PIOs) செய்யும் சொத்துகள் மீதான முதலீடுகளுக்கு பொருந்துபவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி, NRI … Read more

பிக்பாஸ் தமிழுக்கு போட்டியாக தளபதி விஜயை களமிறக்கும் சன்டிவி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரம்மாண்டமாக தொடங்குகிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். … Read more

ராஜராஜ சோழன் விவகாரம்… வெற்றிமாறன் கருத்துக்கு பேரரசு பதிலடி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன், ” தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு … Read more

$475 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு CNN மீது டிரம்ப் அவதூறு வழக்கு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று CNN மீது 475 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். டிரம்பில் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கும் முயற்சியில் CNN நெட்வொர்க் தொலைகாட்சி, தனக்கு எதிரான அவதூறு செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 2020 ஆம் ஆண்டு அதிபர்த் தேர்தலில் தன்னைப் பற்றி பரப்பட்ட அவதூறு செய்திகள் காரணமாக தான் அதிபர் தேர்தலில் … Read more

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை

லக்னோ: தனது துல்லியமான வியூகத்தால் இந்திய அரசியலில் தனி இடத்தைப்  பிடித்துள்ள பிரசாந்த் கிஷோர், தற்போது வெளிப்படையாகவே தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அதை அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து தொடங்கியுள்ளார். பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன் சூரஜ் பாதயாத்திரையைத் தொடங்கினார். காந்தி ஜெயந்தி அன்று மேற்கு சம்பாரானில் உள்ள பிதிஹார்வாவில் இருந்து தனது யாத்திரையைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோரின் இந்த பயணமும் ஒரு அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.  பீகார் அரசியலில் … Read more

ஒரே நேரத்தில் 300 ஆடைகள் அணிந்து உலக சாதனை முயற்சி!

கோவையை சேர்ந்த பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்று வரும் இல்லத்தரசிகள் தாங்களே டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்களது குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணி வகுப்பை நடத்தி அசத்தியுள்ளனர்.  இந்த அணி வகுப்பை உலக சாதனை முயற்சியாக மூன்று மணி நேரத்தில் 300 ஆடைகளை சுமார் எழுபது மாடல்களை கொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more