பிக்பாஸ் தமிழ்: களமிறங்கும் போட்டியாளர்கள் முழு விவரம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் … Read more

Incredible Temple: பனிக்குள் சிவன் கோவில்: உலகிலேயே உயரமான ஆலயத்தின் அற்புத தரிசனம்

புதுடெல்லி: உலகின் மிக உயரமான சிவபெருமானின் ஆலயம், பனி படர்ந்து காணப்படும் புகைப்படங்கள் அனைவரையும் பரவசமூட்டுகின்றன. தற்போது நவராத்திரி திருவிழா கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் கண்கள், கலாச்சார பாரம்பரிய மிக்க இந்தியாவின் வழிபாடுகள் மீது நிலை கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்கள், தெய்வங்கள், பூஜைகள் கொண்டாட்டங்கள் என இந்தியாவின் இந்து மத நிகழ்வுகளை உலகமே, பரவசமாக பார்க்கிறது. இமயமலையில், இமவான் மகள் அன்னை பார்வதி பிறந்தாள் என்பதும், சிவனின் இருப்பிடமும் கைலாசம் என்பதாலும் இந்தியாவின் ஆன்மீக … Read more

பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா

பத்து நாட்களுக்குள் வடகொரியா ஐந்து ஏவுகணை பரிசோதனைகள் நடத்தியுள்ளது. இன்று மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துள்ளது, கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சியோலுக்கு ராஜாங்கரீதியிலான பயணத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேற்கொள்வதற்கு முன்னதாகவும் வடகொரிய ஒரு ஏவுகணையை சுட்டு பரிசோதித்தது. தென் கொரியாவுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர், வடகொரியாவுடனான மோதலில் தென் கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.   தென் கொரியாவும் அமெரிக்காவும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, … Read more

பொன்னியின் செல்வன்: இளம் நந்தினியாக நடித்த விக்ரமின் மகள்

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபீஸில் இப்போது கோலோச்சிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 200 கோடியை கடந்துவிட்டதாக லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும்மல்லாது இந்தியா முழுவதும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இதனையொட்டி படத்தின் தயாரிப்பாளரான லைகா புரொடக்ஷன்ஸ் இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், … Read more

திருச்சி மலைக்கோட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு – ஒருவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பண்டிகை காலங்களில் திருச்சியை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் துணிகள், நகைகள் வாங்குவதற்கு அதிகளவு கூடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருட தீபாவளியை முன்னிட்டும் மக்கள் அப்பகுதியில் அதிகளவு நேற்று கூடி தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் தனியார் ஜவுளிக்கடைக்கு முன் இருசக்கர வாகனத்தில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றிவந்த இருவர் பலூன் வியாபாரம் செய்யத்தொடங்கினார்கள். பலூனை ஊதுவதற்காக ஹீலியம் சிலிண்டரை … Read more

கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.  இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு … Read more

சென்னையை பொறுத்தவரை 95% மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்துள்ளன: அமைச்சர் சேகர்பாபு

வடசென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் 5 இல் இன்று மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுகூட்டமானது மாநகராட்சி அதிகரிகளோடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். இதன் பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். தற்போது உள்ள தமிழக அரசை போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கூட … Read more

பற்றி எரியும் ராஜராஜ சோழன் விவகாரம்; வெற்றிமாறனுக்கு சீமான் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன் தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள் என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர … Read more

ஊழல் ரேங்கிங்… கர்நாடகாவுக்கு முதல் இடம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். தற்போது அந்தப் பாத யாத்திரை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அப்போது பேசிய ராகுல்காந்தி, “நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளத. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது . இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு … Read more

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியான்கி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலரும் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று ரசித்துவருகின்றனர். இதனால் படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே 200 கோடி … Read more