இராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட கொலு… 1000த்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்!

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. நவராத்திரிக்கு கொலு வைப்பது முக்கியமானது. ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், … Read more

செயலில் கவனம் தேவை… நடவடிக்கைக்கு தயங்கமாட்டேன் – ஸ்டாலின் எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் … Read more

ராஜராஜ சோழன் இந்து இல்லையா?… வெற்றிமாறனுக்கு எதிராக வாள் சுழற்றும் வானதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் மணிவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்துவாக்கிவிட்டார்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆனால் அவர் அப்படி எதுவும் கூறவில்லை அவரது பேச்சு திரிக்கப்பட்டிருப்பதாக வெற்றிமாறன் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதெசமயம் வெற்றிமாறன் அப்படி பேசியது கண்டனத்திற்குரியது என குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெற்றிமாறனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் … Read more

பொன்னியின் செல்வனில் ஹீரோயிசத்தை தேடித்தேடி அகற்றினார் மணிரத்னம் – எழுத்தாளர் ஜெயமோகன் ஷேரிங்ஸ்

பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. மணிரத்னத்துடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் குமரவேல் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், படத்தில் பிரமாண்டங்களோ, விஎஃப்எக்ஸோ அதிகம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதள பக்கத்தில், “பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2022 மற்றும் 07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

வானொலி மூலம் இந்தி திணிக்கப்படுகிறது – ராமதாஸ் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி, நேற்று … Read more

ராஜமௌலி Vs மணிரத்னம்?… ஆரம்பித்து வைத்த ராம்சரண் வீடியோ; ட்விட்டரில் களேபரம்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியான்கி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலரும் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து படத்தை ரசித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் எதார்த்தமாக படமாக்கியிருப்பதாகவும் … Read more

காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு: பேருந்துகளில் கண்கவர் விளம்பரம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து இன்று இயக்கப்படுகின்றன.   சென்னை மாநகரில் முதல் கட்டமாக, காலை உணவுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், … Read more

பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்… அடுக்கடுக்கான காரணங்கள்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் பலர் செய்த முயற்சி கைகூடாமல் போக மணிரத்னம் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக பல நடிகர்களை வைத்து 150 நாள்களில் ஷூட்டிங்கையும் முடித்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் கொண்டாடிக்கொண்டிருக்க மற்றொரு தரப்பினர் படம் திருப்திப்படுத்தவில்லை என்கின்றனர். இந்த இரண்டு தரப்பினர் மட்டுமின்றி மூன்றாவது தரப்பினரும் இருக்கின்றனர். அவர்கள் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு … Read more

ஏ.கே61 படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் காதல் ஜோடி; மாஸ்டர் நடிகருக்கும் வாய்ப்பு

அஜித்தின் ஏகே 61 படம் மாஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஹெச். வினோத். இவர்கள் இருவரின் கூட்டணியில் கடைசியாக வெளியான படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்ட நிலையில், ஏகே 61 படத்திற்கு ‘துணிவு’ என டைட்டில் வைத்துள்ளனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாவதாக கூறப்படுகிறது. மங்காத்தா பாணியில் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது.  அஜித்துடன் மஞ்சுவாரியர், சர்பாட்டா பரம்பரை படத்தின் … Read more