ஆர்.எஸ்.எஸ்-ஐ தனி மனிதனால் அழிக்க முடியாது – மத்திய இணையமைச்சர் சூளுரை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர்.  அந்தவகையில், சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை … Read more

அசுரன் – ஐடியா கொடுத்த திருமாவளவன்; ஏற்க மறுத்த வெற்றிமாறன்?

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற கதையை தழுவி அசுரன் படம் உருவானது. வெற்றிமாறன் இயக்க தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து 2019ஆம் ஆண்டு படம் வெளியாக மாபெரும் வெற்றிபெற்றது. வெற்றியோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. கதையாக மட்டுமின்றி தனுஷின் நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. இந்தச் சூழலில் அசுரன் படம் ஆரம்பிக்கும்போது திருமாவளவனை சந்தித்தது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 60வது … Read more

காயத்தில் வலியில் துடிதுடித்த சிறுத்தை மீட்கப்பட்டது! முதுமலையில் சிகிச்சை

கோவை: தனியார் காபி  தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள சேரம்பாடி அத்திச்சொல் பகுதியில் மேத்யூ என்பவரின் காபி தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று மாட்டிக் கொண்டிருப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனே, சம்பவ இடத்திற்கு  சென்ற வனத்துறையினர் பார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தை ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது . … Read more

மழை பொய்த்தது – இந்தியா முதலில் பேட்டிங்; மிரட்ட காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வேகங்கள்!

மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் … Read more

‘தல’ பெயரை கேட்டவுடனே டென்ஷன் ஆன விஜய் சேதுபதி; லயோலா கல்லூரியில் சம்பவம்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத ஹீரோ. யாரின் துணையும் இன்றி தனியாக தன் திறமையின் மூலம் முன்னேறியவர். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார். இதனால் அவர் கோலிவுட் மட்டுமின்றி வேற்று மொழி படங்களிலும் நடித்துவருகிறார். விஜய் சேதுபதியின் நடிப்புக்கு மட்டுமின்றி அவரது பேச்சுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியேகூட விஜய் சேதுபதியின் பார்வையையும், பேச்சையும் பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் … Read more

திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேசதந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறடு. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில், அதிமுக சார்பில் மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும்  காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. … Read more

'வாவ்…' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் – தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

மத்திய அரசு ஆண்டுதோறும், சுத்தமான நகரம் குறித்து கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிடும். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், முதல் மூன்று இடங்களை முறையே இந்தூர் (மத்தியப் பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. முதலிடம் பிடிக்கும் நகரத்திற்கு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் மத்திய அரசு விருதளிக்கும். இந்தூர் நகரம் இந்த விருதை தொடர்ந்து ஆறாவது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதில், முதல் … Read more

காந்தி டாக்ஸ் – ஜீ ஸ்டூடியோஸின் அடுத்த படைப்பு… இணைந்த ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி

Zee Studios தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில்  தனி முத்திரை பதித்து வருகிறது. அந்தவகையில் அடுத்த படைப்பாக காந்தி டாக்ஸ் படத்தை தயாரிக்கிறது.இந்தப் படம் ஒரு மௌன படமாஉம். காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, கடந்த கால மௌனப் பட பரவசத்தை தற்கால  பார்வையாளர்களுக்கு தரும் என கருதப்படுகிறது. இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ரி மற்றும் சித்தார்த் ஆகியோர் … Read more

பொன்னியின் செல்வன் Vs நானே வருவேன்… நாங்கள் விட்டுக்கொடுத்தோம் – இயக்குநர் செல்வராகவன் பெருமிதம்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். நீண்ட நாள்கள் இருவரும் இணையாமல் இருந்த சூழலில் தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் லேட்டஸ்ட் ஆள்வந்தானாக படம் உருவாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். அதுமட்டுமின்றி … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 என நீண்டிருக்கும்… செல்வராகவன் கூறிய சுவாரஸ்ய தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். மேலும் ரியாலிட்டியோடும், வழக்கமான மன்னர் படங்களின் டெம்ப்ளேட்டுகளை மீறியும் ஒரு படம் வந்தது என்றால் அது தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் மட்டும்தாம். குறிப்பாக செல்வராகவனின் காட்சியமைப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் … Read more