கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையை சுற்றிய பாம்பு! வைரலாகும் வீடியோ!

நவராத்திரி தொடங்கிவிட்டதால் அனைத்து கோவில்களிலும் சாமி சிலைகள் போன்ற பல்வேறு சிலைகளை வைத்து கொலு வைப்பார்கள்.  ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள், நெய்வேத்தியம், பூஜை என கோலாகலமாக 9 நாட்கள் நடைபெறும்.  சிலர் வீடுகளிலும் கொலு வைப்பார்கள், இதற்கென விரதமிருந்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் அமைத்து அதில் கண்கவர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.  இதில் புராண கதைகளை கூறும் விதமான பொம்மைகள், திருக்கல்யாணம், வாணிபம், போக்குவரத்து, நாகரீகம், விலங்குலகம், பறவைகள், … Read more

ஊரக சுகாதாரத்தில் தமிழகத்திற்கு தேசிய அளவில் 3ம் இடம்: ஜனாதிபதி விருது

தமிழகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-இன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சுமார் 50 இலட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில் 413 சமுதாய சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 12,525 கிராம ஊராட்சிகள் அனைத்தும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை எய்தின. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-இன் கீழ், பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெறுவதிலிருந்து எந்த ஒரு குடும்பமும் … Read more

அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

புதுடெல்லி: அண்ணல் காந்தியடிகள் என்று அழைக்கப்படும் மாண்புமிகு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தி, தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை. ஆனால், அவரது இந்த எளிய பண்பே அவரை மகானாக உயர்த்தியது. அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் இலட்சியத்தை போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, “அனைத்துலக வன்முறையற்ற … Read more

சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் பூஜா என்கிற பள்ளி மாணவி உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி மண்டலம் 11, 144 வது வார்டு, வேல் நகர் 4 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-சுஜிதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இதில் மூத்த மகள் பூஜா ஆவார். இவருக்கு 13 வயது ஆகிறது. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் 8 வது படித்து வருகிறார்.  இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பூஜா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பூஜாவை அவரது பெற்றவர்கள் கேஎம்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

அக்டோபரில் திருப்பதி செல்ல பிளானா? இந்த தேதியில் தரிசிக்க முடியாது

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் பேரில் பக்தர்களும் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் வரும் … Read more

பொன்னியின் செல்வன் வெற்றி: மணிரத்னதுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த அன்பு பரிசு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திரைவடிவம் பெற்ற இந்தப் படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது, ஆங்காங்கே சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கல்கியின் நாவலை படமாக கொண்டு வந்ததில் வெற்றியை நாட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆயிரக்கணக்கானோர் வாசித்து, தங்களின் கற்பனை சிறகுகளில் உருவாக்கி வைத்திருந்த வந்தியதேவன், குந்தவை, நந்தினி, பழுவேட்டரையர்களுக்கு இப்போது உருவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. புனைவு … Read more

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக சாதனை – ரவி விமர்சனம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வரமங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டின் பேரில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி. கடந்த அதிமுக  ஆட்சியில் … Read more

பிரபல யூடியூபரை போட்டியாளராக்கும் பிக்பாஸ் தமிழ் டீம்: அடடே பலே ஐடியாவா இருக்கே

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தொடக்க நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றனர். கடந்த முறை 18 போட்டியாளர்களை இறக்கிய பிக்பாஸ் டீம், இந்த முறையும் அதே அளவு போட்டியாளர்களை களமிறக்க இருக்கிறது. வழக்கம்போல் வெள்ளித்திரை, சின்னத்திரை, கிராமிய கலைஞர்கள், மாடல், ஸ்போர்ட்ஸ் என களமிறக்கும் பிக்பாஸ் டீம், இந்த முறை கூடுதலாக யூ … Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்-1’ பிரம்மாண்டமாக செப்டெம்பர்-30 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க செய்துள்ளது.  இப்படத்தை ட்ரோல் செய்ய காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம், கப்பல் சண்டை காட்சிகள், பார்வையாலேயே குறிப்பறிதல் என படம் அனைவரையும் ரசிக்க செய்துள்ளது.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயன்று தோற்றுப்போன நிலையில் இயக்குனர் மணிரத்னம் இதில் சாதனை படைத்துள்ளார்.  லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் … Read more

Stampede Deaths: ஜகார்த்தாவில் கால்பந்து போட்டி வன்முறையில் நெரிசலில் 127 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்துப் போட்டி ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது. அரேமா மற்றும் பெர்செபயா என்ற இரு அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற  வன்முறையில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு கலகத் தடுப்புப் போலீசார் மைதானத்தை சுற்றி வளைத்தனர். விளையாட்டு மைதானத்தின் ஆடுகளத்தில் கூடிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கூட்ட … Read more