மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு – சென்னை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் இல.கணேசன். பாஜக மூத்த தலைவரான இவர், தேசிய செயலாளராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பு இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவும் இருந்தார்.  இவர், தென் சென்னை மக்களவை தொகுதியில் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றுக்கொண்டார்.  தொடர்ந்து, எம்பி பதவி காலாவதியாகும் முன்பே, கடந்தாண்டு மார்ச் … Read more

அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?… சீமான் கேள்வி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல முன்மாதிரி வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கிற … Read more

பாக்யராஜ் நீக்கம்… ட்விட்டரில் சண்டையை ஆரம்பித்த சாந்தனு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் … Read more

Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கம் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஏகப்பட்ட நூதன முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்படி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய  ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதையடுத்து பாதுகாப்பு … Read more

‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' – எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்… மதுரையில் கலகலப்பு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் படத்தை மணிரத்னம் எடுத்திருப்பதால் பொன்னியின் செல்வன் எப்படி உருவாகியிருக்கும் என்பதை காண்பதற்கு பலரும் ஆவலாக இருந்தனர். அதுமட்டுமின்றி அதுவரை பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்காதவர்கள்கூட புத்தகத்தை வாங்க தொடங்கினர்.  புத்தகத்தை படிக்காதவர்கள் இப்படி என்றால் புத்தகத்தை படித்தவர்களோ, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மணிரத்னத்தின் மேக்கிங்கை தொடர்புப்படுத்தி பேசிவந்தனர். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் புத்தகத்தை பலர் படிக்கும்படியாக ஏகப்பட்ட … Read more

சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் – கடைசியில் செம ட்வீஸ்ட்

வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளது. காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றை போட்டி போட்டு எடுத்துள்ளனர்.  இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் … Read more

முதல் நாளே 100 கோடி அருகில் – பொன்னியின் செல்வன் மெகா வசூல்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க தொடங்கின. பலர் குடும்பத்துடன் சென்று முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடிவருகின்றனர்.  மேலும், நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி மணி கலக்கியிருக்கிறார் … Read more

திருமாவளவன் போட்ட விதை – சமூக நல்லிணக்க மனித சங்கிலி… அக் 11ல் கைகோர்த்த 10 கட்சிகள்

அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில் அன்றைய தேதி சமூக நல்லிணக்க பேரணி நடக்குமென்று திருமாவளவன் அறிவித்தார். அதற்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன பேரணியில் கலந்துகொள்ள தயாராகின. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து … Read more

தொல்லை செய்யாதீர்கள்… தற்கொலை செய்துகொண்ட நடிகை – பாலிவுட்டில் பரபரப்பு

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு என்ன கவலை என்று பலர் பேசுவதுண்டு. ஆனால் அவர்களும் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் திரைத்துறையிலும் தற்கொலை நிகழ்கின்றன. குறிப்பாக பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலை பெரும் விவாதத்தை கிளப்பின. ஆனாலும் தற்கொலைகள் நின்றபாடில்லை. தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அகன்ஷா மோகன் என்பவர் மாடலிங் துறையில் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற … Read more

பாண்டவர் அணியின் அதிரடி… நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் நீக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டடது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.  … Read more