வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். கவாசகி, நிஞ்சா உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில் சாகசம் செய்யும் வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு  செய்து யூட்யூபில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி … Read more

இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு – குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

குஜராத்தின் அம்பாஜி நகரில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”இந்த பண்டிகை காலத்தில் எனது சகோதரிகளுக்கு உதவ, அரசாங்கம் அதன் இலவச ரேசன் திட்டத்தை நீட்டிக்கிறது” என அறிவித்தார். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இக்கட்டான காலங்களில் நிவாரணம் வழங்க மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி … Read more

கூட்டு பாலியல் வன்புணர்வு : சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூரம் – காவலரும் உடந்தை

உத்தரப் பிரதேசத்தின் மவு நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்துள்ளார். ஜெய்நகரில் உள்ள சந்தைக்கு வந்த சிறுமி, அங்கிருந்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அப்போது, அர்ஜூன் யாதவ் என்ற அந்த நபர், சிறுமியை கடத்தி சென்று தனது இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.  மேலும், தனது மூன்று நண்பர்களை அழைத்து, அவர்களுடன் அந்த சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். … Read more

திரையரங்குகளில் வீடியோக்கள் எடுப்பது தவறு – இயக்குநர் கௌதம் வாசுதேவ்

சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவும் கம்பேக் கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் வெற்றியை அடுத்து அவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி; காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவது பல்வேறு இடங்களில் அக்.2ஆம் தேதி அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை காரணமாக கூறி, வரும் அக்.2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க இயலாது என காவல் துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, … Read more

டாஸ்மாக் பார் டெண்டர் – ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான  டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.  தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும்  இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் இரண்டாம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் … Read more

தேசிய விருதை பெற்ற சூர்யா – ஜோதிகா ஜோடி

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய விருது தேர்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மேலும், விருதை பெறுவதற்கும், நாடு முழுவதும் இருந்து திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் விழாவில் வருகை தந்தனர். தமிழ்நாடு சார்பில் சூரரை போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட … Read more

100 கோடி சுருட்டப்பட்டுள்ளது… ஊழல் வெளிச்சம்தான் விடியலா?… அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. தற்போது மீண்டும் அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறதென்று அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு … Read more

'நான் விளையாட்டாக பேசினேன்… தவறாக புரிந்துகொள்ளப்பட்டது' – அமைச்சர் பொன்முடி

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 30) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.  இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 … Read more

Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் – குவியும் பாராட்டு

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் … Read more