Madras HC: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் … Read more

மழலை மாணவர்களுக்கு அயோத்தியில் நடக்கும் கொடுமை! சாதமும் உப்பும் மட்டுமே உணவு!

அயோத்தியா: ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பரிமாறப்பட்ட உணவு வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில், தரையில் அமர்ந்தபடி பள்ளிக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

PS1 Review: ’சோழனுக்கு எப்போதும் தோல்வியே இல்லை’ பொன்னியின் செல்வனை கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் புகழ்பெற்ற படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இன்று படமாக வெளிவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சோழர் சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகாலை ரிலீஸான இந்தப் படத்துக்கு பாசிடிவ் விமர்சனைங்களையே கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். முதல் பாகத்தின் முதல் பாதி மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால், இரண்டாம் பாகம் புல்லரிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more

பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்… புதிய சகாப்தம் தொடங்கியது என்பதை குறிக்கும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் ஏற்படும் மாற்றங்களின் புதிய உத்தியோகபூர்வ வெளிப்பாடு இது. பிரிட்டன் அரசராக ஆல்ஃபிரட் தி கிரேட் இருந்த காலத்தில் இருந்து, அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் நிறுவனம் … Read more

RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக தலைமயைாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத்தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினம் … Read more

தொடரும் குளியலறை வீடியோ சர்ச்சை: இந்த முறை உ.பி.,யில் – போர்க்கொடி தூக்கும் மாணவிகள்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தாங்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்களை வீடியோ எடுத்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல பெண்கள் இணைந்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். சில வாரங்களுக்கு முன்பு சண்டிகர் பல்கலைக்கழக சர்ச்சையைப் போன்று, பெண்கள் விடுதியில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி, மாணவிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

Exclusive: திலகவதி IPS மீது மருமகள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையா? திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை கொடுமை படுத்தியதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் அளித்த பேட்டியை ஜீ தமிழ் நியூஸ் சேனலில் ஒளிபரப்பி இருந்தோம். ஒரு தரப்பின் பேட்டியை மட்டும் ஒளிபரப்பியதை அடுத்து திலகவதி ஐபிஎஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தோம். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் … Read more

செவ்வாய் கிரகத்தில் வெள்ளம்! தண்ணீர் உள்ள கிரகம் என்பதை உறுதிப்படுத்தும் தரவுகள்

லண்டன்: செவ்வாய் கிரகத்திற்கு சென்ற சீனாவின் ஜூரோங் மார்ஸ் ரோவர் மிகப் பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ள செய்தி அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. சீன அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளின் தரவுகளிலிருந்து கிடைத்துள்ள விஞ்ஞான உண்மை இது. செவ்வாயின் மேற்பரப்பில் பல துணை அடுக்குகள் உள்ளதை ரோவரின் படங்கள் காட்டுகின்றன.   செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள புதிய படம் … Read more

63 ஸ்பூனா…! வயிறா இல்லை வேற எதாவதா – அதிர்ந்த டாக்டர்கள்

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் விஜயகுமார் (32) என்பவர், தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.  அவருக்கு, 2  மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் இருந்து தலைகள் இல்லாத 63 ஸ்பூன்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மேலும், … Read more

பொன்னியின் செல்வன் கதாபாத்திரப் பிணைப்பு: 360 டிகிரி பார்வை

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீட்டை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை நம்மில் பலர் படித்திருப்போம். இந்நாவலை படிக்காதவர்கள் ஒரு வரலாற்றுப் பின்னணி கதை கொண்ட திரைப்படமாக மட்டுமே பொன்னியின் செல்வனை எதிர் பார்க்கின்றனர். ஆனால் அந்நாவலை படித்தவர்கள், கல்கியின் கற்பனைக்கு மனிரத்னம் எவ்வாறு உயிர் கொடுத்து நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் என்பதைக் காணவும், 5 பாகங்களும், 293 அத்தியாயங்களும் கொண்ட ஒரு நாவலை எவ்வாறு 6 மணி நேரத்தில் … Read more