தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை: நீதிபதிகள்

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்  என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.  2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களைக் கொண்டு மலம் அளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய கோரிய வழக்கு விசாரணையில், நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற … Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “தனியாக வாழும் அல்லது திருமணமாகாத பெண்களுக்கும் மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை உரிமை … Read more

நானே வருவேன்; முதல் பாதி ஓகே..இரண்டாம் பாதி சீரியல் – நெட்டிசன்களின் பார்வை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி தாணு தயாரித்து வெளியிட்டிருக்கும் இந்தப் படம் சைகோ திரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல தனுஷ் ரசிகர்கள் படத்தை ஆஹா …ஓஹோ என புகழ்ந்துள்ளனர். அவர்கள் புகழவில்லை என்றால் தான் ஆச்சரியம். முதல் பாதி தெறியாக இருக்கிறது. இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். கூடவே, படத்தை விமர்சிப்பவர்களை வறுத்தெடுக்கவும் அவர்கள் தவறவில்லை. படம் நன்றாக இருக்கிறது, வேண்டுமென்றே தனுஷ் படத்தை விமர்சிக்க வேண்டும் … Read more

RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை … Read more

RSS உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது: தமிழ்நாடு அரசு

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் … Read more

Video: உலகின் முதல் மின்சார விமானம் 'Alice'; விமான போக்குவரத்தில் புதிய மைல்கல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும், சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, பெட்ரோல் டீசல் அல்லாத பிற ஆற்றல்களில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களை தயாரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இருந்து மின்சார விமானங்களை அறிமுகப்படுத்துவது வரை, கார்பன் உமிழ்வைக் குறைக்க நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன. எவியேஷன் விமானம் நிறுவனத்தின் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட ‘ஆலிஸ்’ மின்சார விமானத்தின் மூலம் விமான போக்குவரத்துத் … Read more

நானே வருவேன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.  மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட நானே வருவேன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் இரட்டையர்களாக தனுஷ் ஒரு கதாபாத்திரத்தில் நல்லவராகவும், ஒருவர் சைக்கோபாத் ஆகவும் காட்டப்படுகிறார், அதில் ஒரு … Read more

மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை: மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா. இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார் அந்த ஆசிரியர். மேலும் அந்த மணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார். அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பதும். இரவு நேரங்களில் … Read more

புளோரிடாவை புரட்டி போட்டுள்ள இயன் சூறாவளி; மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 18 லட்சம் மக்கள்!

புளோரிடா தீபகற்பத்தை கடக்கும்போது இயன் சூறாவளி சூறாவளி சிறிது வலுவிழந்துள்ளது என்றாலும்,  பலத்த மழை மேலும் தொடரும் என்பதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பிளோரிடாவை புரட்டி போட்டுள்ளது. படகுகள் மட்டுமல்லாது சில வீடுகளுக்கு  கடலில் மிதப்பதைக் காணலாம். புதன்கிழமை பிற்பகலில், புளோரிடாவில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி இயன் புயல் கரையைக் கடந்தது. ஃபோர்ட் மியர்ஸ் மற்றும் கேப் பவளப்பாறைக்கு அருகில் உள்ள கயோ கோஸ்டா தீவில் தென்மேற்கு கடற்கரை காற்று … Read more

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? தனியார் பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்துகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டாலும், செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று இரவே வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 9 ஆம் தேதி வரை விடுமுறைக்கு திட்டமிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். கிட்டதட்ட 9 நாட்கள் விடுமுறை என்பதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோத இருக்கிறது.  குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோர், தனியார் … Read more