தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 6ஆம் தேதி சிபிஐ அவரை கைது … Read more

PS1 Release: ’எக்ஸாம் மனநிலையில் இருக்கிறேன்’ பதட்டமாக பேசும் நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்திற்காக திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், பெங்களூரூ, டெல்லி சென்ற நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, நடிகை திரிஷா ஆகியோர் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டின் பெருமை. முதல் முறையாக நமது படத்தை இந்திய முழுவதும் சென்று விளம்பரப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. செல்லும் இடங்களில் மிகுந்த வரவேற்பு இருந்தது. கேரளாவில் தொடங்கி டெல்லி வரை சென்று வந்துள்ளோம்.   படம் வெளியாக இன்னும் 2 … Read more

PFI தடை; ஆதாரத்தை வெளியிட்டு தடை செய்யுங்க – கே.எஸ்.அழகிரி

நாடு முழுவதும் இருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு திடீர் சோதனையில் ஈடுபட்டது. இதன் நிதிப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை சேகரித்த அதிகாரிகள், அந்த அமைப்பைச் சேர்ந்த பலரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது மத்திய அரசு. இது குறித்து நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தங்களின் … Read more

மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

லண்டன்: அழகுக்காக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அழகாக தோற்றமளிக்கக்கூடாது என்பதற்காக அறுவைசிகிச்சை செய்து மூன்றாவது மார்பகத்தை பொருத்திக் கொண்ட பெண்ணைப் பற்றிக் கேட்டதுண்டா? அசிங்கமாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தால் அவர் அழகாகவே இருக்கிறார். இது அமெரிக்க பெண்மணியின் விபரீதமான ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி வித்தியாசமானவராக மாறியிருக்கிறார் 21 வயது இளம்பெண். 21 வயதான Jasmine Treadville, தனது மூன்றாவது மார்பகத்தை பொருத்துவதற்கு வினோதமான அறுவை … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு GOOD News! 78 நாள் போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் செய்தி: விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் திறமைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக ஜீ பிசினஸ் நியூஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால், இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இது தவிர, மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஏழாவது ஊதியக் … Read more

தேசிய கல்விக் கொள்கை; அரசியல் விமர்சனங்களை கடந்து செயல்படுத்த வேண்டும்; ஆனந்திபென் பட்டேல்

கோவை அவிநாசி லிங்கம் கல்வி குழுமத்தில் தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசி லிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநிலத்தின் ஆளுனர் ஆனந்திபென்படேல் கலந்து கொண்டார். அங்கு தொடர்ந்து அவர் அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களில் சமூகவியல், இயற்பியல், வேதியல், கணினி துறை, உணவு பதப்படுத்தும் துறைகளில் கருத்தரங்கு நடத்தி வெற்றி பெற்ற அவினாசிலிங்கம் கல்லூரியின் 16 மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார். தொடர்ந்து … Read more

அமெரிக்க தேர்தலை குறிவைத்த ரஷ்யாவில் இருந்து இயங்கிய நெட்வர்க்குகளை நீக்கியது மெட்டா

அமெரிக்க இடைத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விவகாரத்தினால் அதிக எச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை மெட்டா செய்தித் தொடர்பாளர் CNN இடம் கூறினார். நெட்வொர்க் சிறியதாக இருந்தது என்றும், அது எந்த கவனத்தையும் பெறவில்லை என்றும் கூறப்பட்டாலும், அரசியல் ஸ்பெக்ட்ரமின் இருபுறமும் அமெரிக்கர்களுக்காக காட்டப்படும் சில கணக்குகள் இதில் அடங்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.  “அவர்கள் அமெரிக்கர்கள் போல் நடிக்கும் போலி கணக்குகளை நடத்தி, அமெரிக்கர்களைப் போல பேச … Read more

இலவச உணவு தானியங்கள்: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

PMGKAY: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மோடி அரசிடமிருந்து வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் வரை இலவச ரேஷன் பலனைப் பெறுவார்கள். பி.எம்.ஜி.கே.ஒய் திட்டம் டிசம்பர் 2022 வரை நீட்டிப்பு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா … Read more

இந்த சூழலில் அவதூறு அண்ணாமலையின் பேச்சு மிகவும் கேவலமாக உள்ளது: துரை வைகோ காட்டம்

திருச்சி திருவானைக்கோவில் வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படம் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக கட்சி நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ‘மாமனிதன் வைகோ படம் இன்று திருச்சியில் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று கோவையிலும் அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி ஒளிபரப்பப்பட்டது. தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது … Read more

அடாவடி மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை

சென்னை: சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய  மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை விடுவித்தது.  சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அடாவடி செய்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்ற … Read more