காமராஜருக்கு பிறகு கல்விக்கண் திறந்தவர் ஐசரி கணேஷ் தான் – கூல் சுரேஷ்!

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் வேண்டும் வெந்து தணிந்தது காடு.  ஜெயமோகன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது, வெந்து தணிந்தது காடு படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மும்பை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கும், படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு … Read more

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட டீசர்

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘ஆதி புருஷ்‘ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், … Read more

மிகப் பெரிய அப்டேட்: இயக்குனர் வெற்றிமாறனின் புதிய படமா?

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவராவார் இயக்குனர் வெற்றிமாறன். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது இவரது இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் விடுதலை படம் உருவாக்கி வருகிறது. முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் … Read more

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும் விழா சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் … Read more

மைனர்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்

புதுடெல்லி: 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்திலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, வசதிகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 18 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் … Read more

பிக்பாஸ்-6 நிகழ்ச்சி எப்போது? அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு!

ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமானதை போன்றே தமிழிலும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாவது பிக்பாஸ் நிகழ்ச்சி.  பல ஊடகங்களுக்கும், யூடியூபர்களுக்கும், மீமர்களுக்கும் கன்டென்ட் கொடுக்கும் தெய்வமாக இந்த நிகழ்ச்சி விளங்கி வருகிறது.  இதுவரை நடைபெற்று முடிந்த இந்நிகழ்ச்சியின் 5 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னராகவும், இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ் டைட்டில் வின்னராகவும், நான்காவது சீசனில் ஆரி டைட்டில் … Read more

அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கும் மின்வெட்டு; அதிருப்தியில் அமைச்சர்கள்!

திமுக அரசுக்கும், மின்வெட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2006 – 2011திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏன் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒரு வேளை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் அதற்கு மின்வெட்டு தான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட திமுகவில், 10 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போதும், மின்வெட்டு நின்றபாடில்லை. மின்தடை ஏற்பட துவங்கியதும் … Read more

மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India -PFI) மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும்  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த  தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். நேற்றும், உத்தரப்பிரதேசம், … Read more

பிரபல சூப்பர் ஸ்டாரின் தாயார் மரணம்!

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் காலமானார். புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. நடிகரின் தாயார் கடந்த சில நாட்களாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.  இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் … Read more

ஒப்பாரி போராட்டத்தால் கவனம் ஈர்க்கும் எதிர்ப்பாளர்கள்: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு

சென்னை: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளதால், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு விதமான நூதன … Read more