சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ

நான் ஒருத்தன் தான் கட்சிகாரங்கள கூப்பிட்டு மணல் அள்ளுங்கனு சொன்னேன். வேறு எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரங்கள மணல் அள்ளுனு சொன்னது இல்லை. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் கேர்ஆர்என் ராஜேஷ்குமார் பதிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் ராசிபுரம் அடுத்துள்ள காக்காவேரி பகுதியில் பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருவது கூறப்படுகிறது. … Read more

கேரளாவில் கோர விபத்து; BMW காரில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்!

கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாணூர்  பகுதியில் வைத்து நேற்று அதிவேகத்தில் வந்த ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் … Read more

அதிமுக எம்பியின் உறவினர் மீது கொலைவெறித் தாக்குதல்! போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் உறவினர் வாளால் தாக்கப்பட்ட சம்பவம், முதுகுளத்தூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கோகுலகண்ணன். இவர், அதிமுக நியமன எம்பியும் ஓபிஎஸ் சின் தீவிர விசுவாசியுமான தர்மரின் சகோதரியின் மகன் ஆவார். சொந்த ஊரான புளியங்குடியில் தர்மர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த எம்.பி தர்மர் … Read more

மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து விபத்து நிகழ்ந்தது. அதிகாலையில் பணிக்கு சென்ற அரசு பணியாளர்களை, ஏற்றி சென்ற பேருந்து மற்றும் லாரி மீது மெட்ரோ பில்லர்கள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று காலை குன்றத்தூரில் இருந்துTN01 N5450 என்ற அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. அந்த பேருந்தில், அரசு பேருந்துகளில் பணியாற்றும் எட்டு பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் அலந்தூர் சென்றுக் கொண்டிருந்தனர். ஆலந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, இதில் ஒருவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ  பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரிடம் … Read more

தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர் போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் … Read more

Galactic Slam: விண்கல்லில் மோதியது டார்ட் ஸ்பேஸ் கிராப்ட்! வெற்றியா?

கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்கான நாசாவின் முயற்சி வெற்றிபெற்றது. முயற்சி வெற்றி பெற்றாலும், அது எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததா? இதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. 690 கிலோ எடை கொண்ட டார்ட் விண்கலம், 22,500 வேகத்தில் பயணித்தது. விண்கல்லை திசை மாற்றும் முயற்சி டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் கிராப்ட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் … Read more

திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை – எம்எல்ஏ!

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஏழு பேரை அழைத்து சென்று … Read more

மாமன்னன் படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படம்!

கடந்த 2018ம் ஆண்டு கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டனர் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இந்த படத்திற்கு ஏரளமான நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பெற்றது, இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது.  முதல் படத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார், முதல் படத்திற்கு எந்த அளவிற்கு வெற்றி கிடைத்ததோ … Read more

விஜய்யை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணம் – கார்த்திக் சுப்புராஜ்!

கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘பீட்சா’ படத்தின் மூலம் ரசிகர்களது கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.  இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் சிறப்பான இயக்குநர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.  சமீபத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை வைத்து இவர் இயக்கிய மகான் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது கார்த்திக் சுப்புராஜ் ‘ஜிகர்தண்டா-2’ … Read more