தள்ளிப்போகும் ராகவா லாரன்ஸ் படம் – இந்த வருஷம் ரீலிஸ் இல்லை…

5 ஸ்டார் கிரீயேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்து, இயக்கும் திரைப்படம் ‘ருத்ரன்’. இதில், கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படத்தல், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ராகவா லாரன்ஸின் திகில் திரில்லர் வகை திரைப்படமாக தயாராகும் ருத்ரன்  திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இத்திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்தாண்டு … Read more

சீமை கருவேல மரங்கள் அகற்றம்… அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, … Read more

600 இமெயில், 80 போன் கால்… தொடர் முயற்சி – கிடைத்தது உலக வங்கி வேலை

‘வெற்றிக்கு குறுக்குவழி இல்லை’, ‘கடின உழைப்பால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’,’கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது’ போன்ற வாசகங்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால், இந்த 23 வயது இந்திய இளைஞரின் வாழ்வு, முன்கூறிய அத்தனை கருத்துகளையும் உண்மை என்பதை நிரூபிக்கிறது.  இந்தியாவை சேர்ந்த வத்சல் நஹாடா என்ற இளைஞர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக்கத்தில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தற்போது, அவருக்கு உலக வங்கியில் வேலை கிடைத்த அனுபவத்தை, தனது … Read more

உலகநாயகனை சந்தித்த பிரிட்டன் எம்.பி – எதற்கு தெரியுமா?

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். சட்டப்பேரவைத் தேர்தல்வரை அரசியலில் வீரியமாக செயல்பட்ட கமல் ஹாசன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அப்படி அவர் நடித்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் அரசியல்வாதி கமல் கொஞ்ச காலம் ஆப்சென்ட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க பிரிட்டனின் எம்.பி லார்ட் வேவர்லி, மக்கள் நீதி … Read more

ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் – கருணாநிதியுடனான நினைவுகள் பகிரும் சு.சாமி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அவரை வாழ்த்தி பேசினர். இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாசாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : ஓகே செய்த அமைச்சரவை… ஒப்புதல் அளிப்பாரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், … Read more

வெந்து தணிந்தது காடு 2 – இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்… இயக்குநர் கௌதம் விளக்கம்

மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் கைகோர்த்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்புகள் என்ற கதையை தழுவி வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் … Read more

சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

யானையின் வைரல் வீடியோ: யானையின் வைரல் வீடியோ: பலவிதமான அற்புதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் சில அழகான மற்றும் வேடிக்கையான செயல்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.  யானைகளும், யானைக்குட்டிகளும் பெரும்பாலும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன, அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் மனதை இதமாக்குவதாகவும் அமைந்து இருக்கிறது.  சமீபகாலமாக யானைகள் செய்யும் குறும்புகள் பல இணையவாசிகளை கவர்ந்து வருகிறது, அதேபோல தற்போது ஒரு கும்கி யானையின் கியூட் செயல் … Read more

பெண்ணை கொடூரமாக தாக்கும் கும்பல்; வீடியோவால் பரபரப்பு – பெண்களுக்கு எதிரான மாநிலமா உ.பி.,?

சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 56,083 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 50.5 குற்ற விகிதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 31,000 புகார்கள் கடந்தாண்டு (2021) தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) பெறப்பட்டன. 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, கடந்தாண்டுதான் அதிக புகார்கள் … Read more

சாதி ரீதியாக கொடுமை! கலெக்டர் ஆபீசுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற முதியவர்!

Tamil Nadu News: உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் இன்று வழக்கம் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது எராளமான பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அதில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் பையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். சந்தேகமடைந்த போலிசார் அவரது பையை சோதனை செய்த போது பெட்ரோல் பாட்டில் இருப்பதை கண்டு பிடித்ததுடன் அதனை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்பொழுது அவர், கோத்தகிரி அருகே உள்ள … Read more