ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த 'சூர்யா 42' படக்குழுவினர்!

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா42’ படத்தின் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பூஜையுடன் தொடங்கியது.  இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது, 3டி தொழில்நுட்பத்தில் ஆக்ஷன் நிறைந்து உருவாகும் இந்த படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சூர்யா42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் பிக்ச்சர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  படக்குழு படத்தின் சில காட்சிகளை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு படத்தின் அடுத்த ஷெட்யூலை கோவாவில் … Read more

கோவையில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ : புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி

கோவை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ நியமிப்பது குறித்து தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர், மேற்கு மண்டல ஐஜி ஆகியோருக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்களின் சாராம்சம்: கோவை மாநகரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகும். கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தொழில் … Read more

தில்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி. சந்திப்பு!

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளித்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், NIA அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக சோதனை நடத்தின. தேசிய புலானய்வு முகமை நடத்திய சோதனையில், இதுவரை 106 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 11 … Read more

துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இவரை பற்றியா?

‘வலிமை’ படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சமீபத்தில் அதிகாரபூர்வமாக துணிவு என்று பெயரிடப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  ‘துணிவு’ படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் கதை குறித்தும், இதில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்தும் … Read more

தூத்துக்குடியில் பயணிகள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற, பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஒபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ரமேஸ் … Read more

இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் முகமது சேக் அன்சாரி நேற்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 100 கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக விரோத கைது இதை கண்டிகிறது எங்கள் அமைப்பு ,ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த சூழலில் எங்களை விரும்பாத சிலர் எங்கள் மீது அவதூறுகளை … Read more

பாஜகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… 250 பேரிடம் விசாரணை – டிஜிபி சைலேந்திர பாபு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை … Read more

மதவாத சக்திகளை ஒடுக்குங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இசுலாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகாமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும். திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான … Read more

கடன் வழங்கும் ஆப்… கதறி அழுத சீரியல் நடிகை – அதிர்ச்சி வீடியோ

ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்துள்ளன. குறைந்த ஆவணங்களே தேவைப்படுவதால் கடன்களும் எளிதாக கிடைக்கின்றன. ஆனால் குறைந்த கால அவகாசம் மட்டும் கொடுத்துவிட்டு அதிக வட்டியும் வசூலிக்கின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பும் செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் … Read more

பாஜகவினர் மீது தாக்குதல் – மத்திய உள்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும் அண்ணாமலை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். அதுமட்டுமின்றி வகுப்புவாத சக்திகளுக்கு துணை … Read more