வெளிநாட்டு வேலை To அரசியல்… ஏன் தெரியுமா?… அனுபவம் பகிரும் அமைச்சர்

மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியலுக்கு பலர் பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து பின்பு அதை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான். நான் அமைச்சரான பின்பு … Read more

'எம்ஜிஆர் தலைமையை விட்டுவிட்டு வந்தேன்… போயும் போயும் இபிஎஸ் உடனா இணைவேன்'- சுப்புலட்சுமி ஜெகதீசன் தடாலடி

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதிவை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த செப். 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 2009க்கு பிறகு தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும், ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அதன்படி, ஸ்டாலின் முதலமைச்சராகி பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இது தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் கூறியிருந்தார். எனவே, அந்த மனநிறைவுடன், நீண்ட நாள் … Read more

'அரசியலில் இருந்து விலக தயார், ஆனால் …' – நிதியமைச்சரை சாடும் செல்லூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் செப்.29ஆம் தேதி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் , முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார்.  ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய … Read more

வெந்து தணிந்தது காடு வெற்றி – சிம்புவுக்கு கார், கௌதமுக்கு பைக்… தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்

மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் கைகோர்த்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்புகள் என்ற கதையை தழுவி வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.   Producer Dr @IshariKGanesh gifted a Brand … Read more

காந்தியை கொன்றவர்களே அவரது நினைவு தினத்துக்கு பேரணி நடத்துவது சூழ்ச்சி: விசிக

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழக முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இந்த பேரணி தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்துக் … Read more

வகுப்பறையில் சிறுமியின் ஆடையை அகற்ற சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்

மத்தியப் பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 10 வயதான பழங்குடியின சிறுமி, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த 10 சிறுமியின் உள்ளாடை மட்டும் அணிந்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியினர் மத்தியில் பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அக்கிராமத்தினர்கள் ஆசிரியரின் செயலைக் கண்டு கோபமடைந்தனர். இதுதொடர்பாக, பழங்குடியின நலத்துறை உதவி ஆணையர் … Read more

சென்னையில் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை மாதவரம் அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன், இவருடைய மகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.   சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாசனின் இளைய மகன் கார்த்திக் படுக்கையில், அண்ணன் தம்பி இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பது பற்றி நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்துள்ளனர்.  இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் – விசிக அழைப்பு

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ சங்க காலம் முதல் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வானளாவிய கோபுரங்கள் கொண்ட திருக்கோயில்கள் நிறைந்த இந்த மண்ணில்தான் சமணமும், பௌத்தமும் நீண்ட நெடுங்காலம் வேரோடித் தழைத்திருந்தன. சமயக் காழ்ப்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கைக்குச் சான்றாக திகழும் நிலம் தமிழ் நிலம் ஆகும்.  … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவு!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 77வது பொதுச் சபையில் உரையாற்றிய லாவ்ரோவ், “ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும்” என்று  கூறினார். ஐநா … Read more

துணிவு படத்தின் ரிலீஸ் தேதி! வாரிசு படத்துடன் மோதல் இல்லையா?

தமிழ் சினிமாவிற்குள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நுழைந்து இன்றுவரை புகழின் உச்சத்தில் இருக்கும் இரு துருவங்கள் தான் விஜய் மற்றும் அஜித்.  இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் ஆண், பெண் என பாலின வேறுபாடின்றி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்த இருவரின் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து அவர்களது ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாவது வரை சமூக வலைதளங்களில் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் போன்றவற்றை பகிர்ந்துகொண்டு உற்சாகத்தில் இருப்பார்கள்.  அதேபோல அன்றிலிருந்து இன்றுவரை இவர்களின் ரசிகர்களின் ஒருவரையொருவர் … Read more