நீரில் மிதந்து யோகாசனம்! சாதனை படைத்த யோகா மாஸ்டர்!

காஞ்சிபுரத்தில் யோகா பயிற்சி நிலையம் நடத்தி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு யோகா கலையை பயிற்றுவித்து வருபவர் யோகா மாஸ்டர் நிர்மல் குமார்.  இவர் யோகாசனத்தில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தி உள்ள நிலையில் தண்ணீரில் மிதந்தவாறு கடினமான யோகாசனங்களை செய்து காட்ட முடிவு செய்தார்.  அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் முன்னிலையில் யோகாசனம் செய்து காட்டும் நிகழ்வு நடைபெற்றது. … Read more

அரசியலின் குரல்வளையை ஆன்மீகமும் ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியலும் பிடிப்பது தகாது!

அரசியலின் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும் ஆன்மீகத்தின் குரல் வளையை அரசியல் பிடிப்பதும் தகாது இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம் என வைரமுத்து கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் தனியார் திருமண மகாலில் கவிஞர் இலக்கியா நடராஜனின் “பெயர் தெரியாத பறவையென்றும்” கவிதைகள் மற்றும் “மயானக்கரை ஜனனங்கள்” சிறுகதைகள் ஆகிய இரு நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, … Read more

மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்த பிரபல இயக்குனர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலான இளைஞர்களை விரைவில் கவர்ந்துவிடுகிறது, சிறந்த பொழுதுபோக்கான படங்களை தந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான இவர் சினிமாவில் பாடகராக தான் தனது முதல் அடியை எடுத்து வைத்தார், அதன் பின்னர் சில படங்களில் நடிக்க தொடங்கினார், இறுதியாக 2007ம் ஆண்டு வெளியான ‘சென்னை’ 28 படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்து தற்போது சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து … Read more

அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை

தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வட கொரியா அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் வரவிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, சவால்விடும் நடவடிக்கை என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வடக்கு பியோங்யாங்கின் டேச்சோன் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து காலை 7 … Read more

இறந்த கணவர் மீண்டு வருவார்… அழுகிய உடலோடு 18 மாதங்கள் வாழ்ந்த மனைவி

உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூரில் வசித்து வந்தவர் விம்லேஷ் தீட்சித் . 52 வயதான இவர் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவ்வாறு இருக்க ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அலுவலகம் சென்ற விம்வேஷ் தீட்சித் அங்கே நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து அவரது சக பணியாளர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல விம்லேஷ் தீட்சித்தின் உறவினர் … Read more

மாணவர்கள் செய்யும் அட்டகாசம்! பேருந்தை இயக்க அஞ்சும் ஊழியர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றி பாப்பாங்குளம், திருப்புலிவனம், மானாமதி, ரெட்டமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.  அதேபோல திருப்புலிவனத்திலும், செங்கல்பட்டு சாலையில் உள்ள பருத்திக்கொள்ளை என்னும் இடத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கு உத்திரமேரூரில் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பேருந்து … Read more

என்னது? பூமியின் ஏலியன்களா நாம்? அதிர வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி!

பூமியின் பூர்வீக பிள்ளைகள் இல்லையா நாம்? என்ற கேள்விகளை ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எழுப்புகின்றன. பூமியில் உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சமிக்ஞைகளை ஒரு ஆராய்ச்சிக் கொடுக்கிறது. சிறுகோள் தூசியில் காணப்படும் நீர் ஏற்படுத்தும் சந்தேகங்கள், விஞ்ஞானிகளின் முந்தைய அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. … Read more

'உனக்கு 12… எனக்கு 30' – அமெரிக்க அதிபர் பைடன் பேச்சால் சலசலப்பு

அமெரிக்க நாட்டு அதிபரும், ரிப்ளிக் கட்சித் தலைவருமான ஜோ பைடன், நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசியக் கல்விச் சங்கத்தில் நேற்று உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண்மணியை பைடன் கவனித்தார். பருவநிலை மாற்றம் குறித்த தனது பேச்சை பாதியில் நிப்பாட்டிய அதிபர் பைடன், அந்த பெண்ணை சுட்டிக்காட்டி,”நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லலாம்” என கூறினார். அதாவது, ஏற்கெனவே இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என தெரிந்தது.  மேலும் படிக்க | மாமிசம் சாப்பிட்டால் … Read more

ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவர் – சண்டைப்போட்டதற்கு கண்டித்ததால் வெறிச்செயல்

தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கிய சம்பவங்கள் நடந்தேறின. மேலும், ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தையில் பேசுவது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களும் நடந்தன. அந்த வகையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலும் அதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் சீதாபூரில் 10ஆம் வகுப்பு மாணவன், மற்றொரு மாணவனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களின் ஆசிரியர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆசிரியர் கண்டித்ததால், 10ஆம் வகுப்பு மாணவர் மிகவும் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. நீண்ட … Read more

'என்னை விபச்சாரியாக்க முயல்கிறார்கள்' – கொலை செய்யப்பட்ட உத்தரகாண்ட் பெண்ணின் மெசேஞ் சிக்கியது…

உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் நகரில், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவரின் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி ஒன்றை நடத்திவந்தார்.  அதில், 19 வயதான பெண் ஒருவர் வரவேற்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த பெண், அங்கிருந்த கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார். முன்னதாக, சொகுசு விடுதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு ‘சிறப்பு சேவை’ செய்யக் கோரி விடுதி உரிமையாளரான புல்கித் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை அவர் கொலை செய்ததாகவும் … Read more