TN Weather Forecast: இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24.09.2022,  25.09.2022 மற்றும் 26.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான பெய்யக்கூடும். 27.09.2022 மற்றும் 28.09.2022 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

நான் ஒன்றும் குழந்தை இல்லை – நயன்தாராவின் அசத்தல் பேச்சு; வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத நயன் தன் உழைப்பால் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார். கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண … Read more

வண்டலூருக்கு முதல்வர் வருகை – வெயிலில் வாடிய வதங்கிய பொதுமக்கள்

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியியல் பூங்காவில் மரகன்று நடும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையால் உயிரியியல் பூங்க நிர்வாகம் தற்காலிகமாக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது.இதனால், வண்டலூர் உயிரியியல் பூங்காவின் தலைமை நூழைவாயில் மூடப்பட்டது.  தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து விலங்குகளை குழந்தைகளுடன் பார்வையிட வந்த பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்காலிகமாக அனுமதி மறுக்கபட்டாலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகள் … Read more

படம் முடிந்ததும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள் – நித்தம் ஒரு வானம் இயக்குநர்

நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் ‘நித்தம் ஒரு வானம்’. படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். ‘நித்தம் ஒரு வானம்’ நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் … Read more

அண்ணா பிறந்தநாள் : நன்னடத்தை காரணமாக கைதிகள் படிப்படியாக விடுவிப்பு

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல், 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் … Read more

பழனி முருகன் கோயிலில் மின் இழுவை ரயில் – சேவை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதனால் கூட்டம் அங்கு அலைமோதும். இதனையொட்டி பக்தர்கள் எளிதாக மலைக்கோயிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு … Read more

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சியின், மாநில , மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிகளவில் பெண்கள், இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி … Read more

பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதமடைந்த 5,583 பள்ளி கட்டிங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்குவாரா என  எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘வடகிழக்கு பெருமழை குறித்து நாளை மறுதினம் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பருவமழை குறித்து மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும். அதேபோல் கால்நடை, வேளாண் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்க … Read more

பிளாஸ்டிக் கிளாசில் அஜித் ஓவியம்! அசத்தும் ரசிகர்!

வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் துணிவு. அஜித்தின் 61வது படமான துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. பொதுவாக அஜித் படங்களின் அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும் நிலையில் துணிவு படத்தில் அறிவிப்பு புதன்கிழமை மாலை வெளியானது. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் … Read more

இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ கண்டனம்

அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இசுலாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.  எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.  ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை … Read more