ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… மேல்முறையீடு செய்க – சீமான் ஐடியா

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சியான திமுகவையும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை … Read more

சூடானது சூடானது யுத்தம் – பொன்னியின் செல்வனின் புதிய லிரிக் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.    Namaskaram Hyderabad! Team #PS1 is here  ICYMI,  https://t.co/vBFA2uWYTu In theatres from … Read more

வடிவேலு பேசியதும் பாதி குணமாகிட்டேன் – போண்டா மணி நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் … Read more

எஸ்டிபிஐயை நசுக்குவதில் பாஜகவுக்கு கூடுதல் கவனம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களைத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக வழியில் வெளிப்படையாக இயங்கும் ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் பாப்புலர் ஃப்ரன்ட் … Read more

பிரதமர் பதவிக்கு பேராசை கொண்டவர் நிதிஷ் பாபு -அமித் ஷா ஆவேசம்

Bihar News: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் நடைபெற்ற “ஜன் பவ்னா பேரணி”யில் உரையாற்றிய போது, ​​முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருவரையும் கடுமையாக சாடினார். தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் பாபு, இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இரண்டு நாள் பயணமாக பீகார் மாநிலம் சென்றுள்ள … Read more

புல்புல் கதைதான் மதுரை எய்ம்ஸும் – எம்.பி வெங்கடேசன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்  95சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை)  தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது  95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி  எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.   இதனைத் தொடர்ந்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் … Read more

இந்தியாவே அலறிய சம்பவம் அது – உண்மை கதையா துணிவு?

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு ஏகப்பட்ட பேரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது. இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் … Read more

ஸ்விக்கி, சொமேட்டோ தொழிலாளர்களுக்கு தனி சட்டம் இயற்றுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இணையவழி உணவுச்சேவை நிறுவனமான ஸ்விக்கி தமது ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும். இரவு-பகல் பாராது மக்கள் பசியைத் தீர்க்கும் ஸ்விக்கி ஊழியர்கள் உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடிவருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ஸ்விக்கி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களின் உரிமையைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத … Read more

விஷால் வழக்கு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைப்பு: லைகா படு அப்செட்

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம்  வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல், வீரமே வாகை … Read more

தமிழக பேருந்துகள் தமிழக கேரள எல்லையில் நிறுத்தம்: கேரளாவில் தொடரும் பதற்றம்

கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒரு … Read more