SpiceJet மீதான தடையை நீட்டித்த DGCA… 50% விமானங்களை மட்டுமே இயக்கலாம்!

சில மாதங்களுக்கு முன் ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் 7 முறை தரையிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பிய நிலையில், சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இப்போது 29 அக்டோபர் 2022 வரை விமான நிறுவனம், 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. முதலில் எட்டு வாரங்களுக்கு … Read more

3 நாள்களுக்கு பிறகு விமர்சியுங்கள் – ஊடகங்களுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை

கொரோனா உலகத்தை சிறைப்பிடித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் அதிகளவு பெருகின. அதனையடுத்து பல படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. ஒருகட்டத்தில் ஓடிடியின் அசுர வளர்ச்சி காரணமாக திரையரங்குகள் இனி நிலைக்குமா என்ற கேள்வியும்கூட பலரிடம் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து திரையரங்குகள் வெளியாகின. பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. ரசிகர்களும் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், சில கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றனர். இந்தச் … Read more

மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை லயோலா கல்லூரியில், இந்தியன் சயின்ஸ் மானிட்டர் (Indian science monitor) அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் இடத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், பூமி தாய்க்கு நன்றி செலுத்துகின்ற இந்த தினத்தில், … Read more

நா. முத்துக்குமாருக்கு நன்றி சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ் – வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார்.  அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் … Read more

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார். 1991 முதல் 1996ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார் 1977, 1980, 1984, 1991 வருடங்களில் 4 முறை சேடப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார். பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி … Read more

இறங்கி செய்யணும் – கொந்தளித்த கௌதம் மேனன்; சண்டைக்கு தயாரான ப்ளூ சட்டை மாறன்

விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படம் கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். ஜெயமோகன் எழுதிய  ‘ஐந்து நெருப்புகள்’ என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படமானது கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. ஆனால் படத்தை விமர்சனம் செய்த … Read more

வள்ளலார் பிறந்தநாள் முப்பெரும் விழா: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ‘ வள்ளலார் -200 ‘ எனும் பெயரில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு., ஆன்றோர் சான்றோர் அனைவருக்கும் விழா எடுத்து வருகிறோம் , தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் … Read more

மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்பிலான 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறைக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.  போலீஸார் நடத்திய சோதனையின் போது, மும்பை துறைமுகத்தில் இருந்த ஒரு கண்டெய்னர் லாரியில், சந்தை மதிப்பில் … Read more

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? பேருந்து கட்டண விவரங்கள் இதோ

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 21 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், … Read more

நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். நாட்டு மக்களிடையே ஆற்றிய ஒரு அரிய உரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் போர் நடவடிக்கை தொடங்கி ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் 2 மில்லியன் வலிமையான இராணுவ துருப்புக்களை அணிதிரட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டதாக அறிவித்தார். “தாய்நாடு, அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு … Read more