TN Weather Report: உங்கள் ஊரில் இன்று மழை பெய்யுமா? வானிலை அறிக்கை இதோ

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21.09.2022, 22.09.2022, 23.09.2022 ஆகிய தேதிகளில்  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022 மற்றும் 25.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, … Read more

நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் – அடம்பிடித்த ராமராஜன்; ட்ராப் ஆன கரகாட்டக்காரன் 2

தமிழ் சினிமாவில் 80களின் மத்தியிலும், 90கள் ஆரம்ப காலகட்டத்திலும் கோலோச்சியவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் ஹாசன், விஜயகாந்த் என டாப் ஸ்டார்களுக்கு இணையாக ராமராஜனுக்கும்  ரசிகர்கள் இருந்தனர்.மேலும், அவர்களின் படம் எந்த அளவு வசூல் செய்ததோ அதே அளவு வசூலையும் ராமராஜனின் படங்கள் வசூலித்தன. கிராமத்து மண் வாசனையோடு, கிராமத்திலிருந்து ஒருவர் நடிக்க சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ராமராஜனின் நடிப்பு. அதுமட்டுமின்றி சோலோவாக 45 படங்கள் ஹீரோவாக நடித்தவரும் அவரே. ராமராஜனின் படங்களிலேயே … Read more

பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா? ஆவினை கலாய்க்கும் வீடியோ

மதுரை: ஆவின் பால்பாக்கெட்டில்  ஈ  இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. மதுரையில் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்துள்ளது. அதைப் பார்த்த நுகர்வோர், அதை வீடியோ வெளியிட்டதை அடுத்து, விஷயம் வைரலாக பரவியது. நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். பாக்கெட் பாலுக்குள் ஈ இருந்ததால் அதிர்ச்சியாகும் மக்கள், ஆவினின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கின்றனர். பால் குடிக்க கவருக்குள் ஈ புகுந்ததா? கேள்வி கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், வீடியோவை பகிர்ந்து … Read more

வைரமுத்துவை விட பெஸ்ட் இருக்காங்க; இயக்குநர் மணிரத்னம் ஓபன் டாக்

கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவலான ‘பொன்னியின் செல்வன்’-ஐ இயக்குநர் மணி ரத்னம் படமாக எடுத்திருக்கிறார். எம்ஜிஆர், கமல்ஹாசன் முயன்று எடுக்க முடியாத இந்தப் படத்தை பெரும் முயற்சிக்குப் பிறகு படமாக உருவாக்கியிருக்கிறார் அவர். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையொட்டி, இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றன.  சென்னையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் … Read more

திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். டெல்லி சென்றவர் நடந்தாய்வாலி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் … Read more

கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை. இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். அதன்படி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

அடுத்த மாதம் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதர்கா ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது.  சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர … Read more

ராமநாதபுரம்: மகளை கர்ப்பமாக்கிய பெரியப்பா: கைது செய்த காவல்துறை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாரியூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(46). இவருடைய  மனைவியின் தங்கையும்  மற்றும் அவருடைய  கணவரும்  சில  வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து  இறந்து போயினர். பெற்றோர்கள் இருவரும் இறந்த போனதால் யாருடைய  ஆதரவில்லாமல் அரவணைக்க யாருமின்றி  நிர்கதியாக நின்ற  அந்த  சிறுமி தனது பெரியம்மாவான ரகுநாதனின் மனைவியின் பராமரிப்பில் இருந்துள்ளார். தாய் தந்தை இருவரையும் இழந்து நிற்கும் தனது தங்கையின் மகளை தனது  மகளாக நினைத்த … Read more

சேலம்: குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. அதில், கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை கையெழுத்திட்டு புகார் மனுக்களை பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் நடைபெற்ற தூய சலேத் அன்னை ஆலயத்தின் தேர் விழாவுக்கு கூட தண்ணீர் இல்லை.  இதனால், விலைக்கு தண்ணீர் … Read more

திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அப்துல் கனி மற்றும் சுபீனா பானு தம்பதிகள் இந்த அரிய மற்றும் பாராட்டத்தக்க நன்கொடையை அளித்துள்ளனர். இந்த தம்பதிகள், கோயிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தின் போது, கோயில் வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட … Read more