லெய்செஸ்டர் இஸ்கான் ஆலய தாக்குதலில் அமைதியை மீட்கும் இந்து முஸ்லீம் மதத் தலைவர்கள்

Hindu Temple Vandalization: லெய்செஸ்டரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்கு பிறகு, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, இரு … Read more

1 ரூபாய்க்கு இட்லி வடை; பசியாற்றும் நல்லூர் கிராமத்தின் இட்லிக் கடை!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அருகே உள்ளது இளையபெருமாள் நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் 1 ரூபாய் இட்லி கடை என்பது மிகவும் பெயர் போன இட்லி கடை. 3 தலைமுறையாக மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு இட்லி, வடை, டீ  விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் காலையில் காடு கழனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முதல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் … Read more

கோஹினூரில் இருந்து க்ரீஸ் வரை : பிரிட்டனில் உள்ள பிற நாட்டு கலைப் பொருட்கள்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக, அவர் குறித்த செய்திகளே உலகம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. அவர் குறித்த செய்திகள் வெளியான அதே சமயம், பிரிட்டனில் உள்ள பிற நாடுகளின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களை திரும்பத் தர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. கோஹினூர் வைரம் ராணி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தர வேண்டுமென இந்தியா முழுவதிலும் இருந்து பலர் சமூக … Read more

சட்ட விதிப்படி புதிய துணை பொது செயலாளர் நியமிக்கப்படுவார்: TKS இளங்கோவன்

உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ள நிலையில், அவரது விலகலை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல் நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை; பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை என்றும் டி.கே.எஸ். விமர்சனம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய … Read more

பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த காமுகன்! தர்ம அடி கொடுத்த மக்கள்

சென்னை: சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை குளியல் அறையின் ஜன்னல் வழியாக இருவர் செல்போனில் வீடியோ எடுக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர் பார்த்துவிட்டு இருவரையும் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி தர்மடி கொடுத்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், மடிப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரையும் மீட்டு காவல் நிலையம் … Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கும் திமுக கவுன்சிலரின் கணவர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார்.  இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை … Read more

எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார்: சாடும் கோவை செல்வராஜ்

சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும் ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என கோவை செல்வராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஒ பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கோவை செல்வராஜ், நேற்றைய தினம் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் … Read more

நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போர் மூளுமா..!!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்து, 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார். அவரது பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2023ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள்.  நாஸ்ட்ராடாமஸ் ஒவ்வொரு ஆண்டுற்கும் … Read more

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தங்கப்பாண்டி மரணத்திற்கு விரைவில் நீதி வேண்டும்: சீமான்

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. கணவர் தங்கபாண்டியை இழந்து இரு குழந்தைகளோடு தவித்துவரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் … Read more

கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன்!

கோவை மாவட்டம் ரத்தினபுரி  டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர், அப்போது  போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் … Read more