மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் – திமுக அரசுக்கு மீனவர்கள் அறிவுரை!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும் பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி நஷ்டத்தை ஏற்படுத்துவதும்  தொடரையாதையாகி வருகிறது.  இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து. மீன்பிடிக்கச் சென்ற நிலையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த … Read more

அமைச்சருக்கு தரணும்! பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள்!

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது, இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.  இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கி பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.  ஒவ்வொரு பாட்டிலுக்கும் … Read more

கூல் சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு! பட்ட கஷ்டம்லாம் வீண் போகலை!

தமிழ் திரையுலகில் மீண்டும் தனது மதிப்பை உயர்த்தி வெற்றிநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன்.  கடந்த ஆண்டு ‘மாநாடு’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்க செய்தவர் இப்போது ‘வெந்து தணிந்தது காடு’ எனும் மற்றொரு ஹிட் படத்தை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார்.  கவுதம் மேனன்-சிம்பு காம்போவில் இதுவரை வெளியான படங்கள் பெற்ற வெற்றியை விட இப்படம் ரசிகர்களால் மத்தியில் அதிகளவு பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற … Read more

திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்ஸ்: இறந்து பிறந்த குழந்தை

திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு வயது 36 ஆகும். இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வயது 33 ஆகும். இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்த நிலையில் மருத்துவரால் பிரசவ தேதி இன்று அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வலி … Read more

எடப்பாடியின் டெல்லி பயணம்: சரமாரியாக விமர்சித்திருக்கும் மருது அழகுராஜ்

’அம்மா போட்ட உத்தரவு’ என்ற தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அந்த பதிவில், ” எதுக்காக அவரு டெல்லிக்கு போறாரு..கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா இல்லை எதையாவது கொடுக்கப் போறாங்களா..குழப்பத்திலேயே நடந்து வந்துங்கிட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது பாட்டி வந்து நின்னுக்கிட்டு தம்பி எடப்பாடி கையில மட்டும் இந்த கட்சி சிக்கிடக்கூடாது தம்பி… தலைவரு ரத்தம் சிந்தி … Read more

இங்கிலாந்தில் இந்து கோயில் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று முன்தினம் (செப். 18) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு வெளியே இருந்த கொடியை எதிர் தரப்பினர் அகற்றியது தொடர்பாக இந்த  கலவரம் ஏற்பட்டதாக லெய்செஸ்டர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  கலவரத்திற்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சமூக  வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள சில வீடியோக்களில், இந்து அமைப்பை சேர்ந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: நக்கீரன் நிருபர்-புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல். இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியும் உள்ளது. நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  இன்று (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் … Read more

தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த 'மதுரைக்காரர்கள்'

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று தின்பண்டம் வாங்க சென்றுபோது நடந்த சம்பவம், காணொலியாக இணையத்தில் வெளியானது. கடையில் இருந்த நபர் அந்த வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளார் என தெரிகிறது.  சிறுவர்கள் தின்பண்டம் வாங்க சென்றபோது, … Read more

காங்கிரஸ் தலைவராகும் சசி தரூர் ? கிரீன் சிக்னல் கொடுத்த சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ  பரிசோதனை தொடர்பாக வெளிநாட்டிற்கு சென்று சமீபத்தில் நாடு திரும்பினார். தொடர்ந்து, சசி தரூர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் தலைவராவதற்கு சோனியா காந்தி ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் 2 ஆண்டுகள் கழித்து அடுத்த மாதம் நடைபெற உள்ளது. … Read more

‘யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை’ – கணவன் மனைவி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி வசந்தா (55) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் தனித்தனியே குடும்பமாக வசித்து வருகின்றனர். வசந்தாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை உள்ளதால் தினந்தோறும் மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு காரணமாக மருத்துவரை அணுகியுள்ளனர். வீட்டிலேயே இருந்து மாத்திரையை உட்கொள்ளுமாறு அறிவுரை … Read more