'பணிச்சுமை அதிகரிப்பு.. வருமானம் குறைவு' ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: வார ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டு புதிய விதிகளை சுவிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், இன்று காலை முதல் சுவிகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தில்  பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது சுவிகி நிறுவனம் கொண்டு வந்த புதிய நடைமுறையில் புதிய ஊக்கத்தொகைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி … Read more

விஸ்வரூபமெடுக்கும் சண்டிகர் பல்கலை. வீடியோ விவகாரம் : சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வரும் சன்னி மேத்தா என்ற மாணவி, சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்து, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரன்கஜ் வர்மா என்ற நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியதாகக் கூறி கடந்த 17-ம் தேதி இரவு முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியானதாகவும், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு … Read more

படம் வெளியானது எனக்கே ஆச்சர்யம்தான் – சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து கடந்த வியாழன் (செப். 15) அன்று வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  அப்போது, பேசிய அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது,”இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏஆர் ரகுமான் உடன் … Read more

சூப்பில் 'ஈ' அதிர்ச்சி அடைந்த மருத்துவர். அலட்சியமாக பதில் சொன்ன பிரபல ஓட்டல்!

Flie in Soup: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அடையார் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் நேற்று மதியம் பிசியோதெரபி மருத்துவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார், அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன்பு சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளார், அதனை மருத்துவர் ஸ்பூன் மூலம் கிளறிய பொழுது சூப்பில் இருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்ட பொழுது … Read more

புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்

Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். பிரிட்டனில் 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் பிலிப்புடன் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார். அவரது பெற்றோரும் விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள சிறிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக இன்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். இறுதிச் சடங்குகள் இந்திய நேரப்படி பிற்பகல் … Read more

வெந்து தணிந்தது காடு 2ஆம் பாகம் எப்போது ? – வெற்றி விழாவில் தயாரிப்பாளர் தகவல்

வெந்து தணிந்து காடு திரைப்படத்தின் வெற்றி விழாவில், அதன் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து கடந்த வியாழன் (செப். 15) அன்று வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இயக்குநர் கௌதம் வாசுதேவ் … Read more

கடத்தப்பட்ட காதல் மனைவி… காவல்துறையிடம் கணவர் புகார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். சங்கர்‌ முருகன், கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 28.8.2022 அன்று திருப்பூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளனர். அதாவது சங்கர் முருகனின் சொந்த ஊருக்கு சென்று, அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  ஆனால், இவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு … Read more

மகாராணி எலிசபெத் இறுதிசடங்கு : சாதாரண உடையில் இளவரசர் ஹாரி – ஏன் தெரியுமா?

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலம் , வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரிட்டன் மக்கள், அரச குடும்பத்தினர், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். மகாராணியின் இறுதி ஊர்வலம் உலகம் முழுவதும் நேரலையில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வருகிறது. சென்ட்ரல் லண்டன் பகுதியில் ட்ரோன் பறப்பதற்கு தடை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம், விமானங்களின் சத்தம் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு … Read more

புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி. : இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கக் கூடியவர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த 2009-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், பின்னர் 2010-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  தனது தொகுதியான கிருஷ்ணாநகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியைப் பார்வையிடச் சென்ற அவர், அங்கு தானும் கால்பந்து விளையாடிய புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

பெரும் நகரத்தின் அமைவு கீழடி! விரைவில் கீழடி அருங்காட்சியம் திறக்கப்படும்: எம்பி வெங்கடேசன்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல முக்கியத் தகவல்களை குறிப்பிட்டார். மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் கனவுத்திட்டம் டைடல் பார்க் நிச்சயமாக அமையும் என்று தெரிவித்த அவர், 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு பிறகு எந்தவிதமான தொழில் அறிவிப்பும் … Read more