video: அப்பாவி நாயை பாடாய்படுத்திய டாக்டர் – இதுக்குதானா…?

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர் டாக்டர் ரஜ்னீஷ் கால்வா. அரசு மருத்துவரான இவர், தனது காரில் நாயை சங்கிலியால் கட்டி சாலையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து, இந்த வீடியோ பலரும் பகிரப்பட்டு, இதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  … Read more

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தை கையில் எடுக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படுகின்ற நில பரப்பில் இந்த 7கி.மீ தூரம் உள்ள கம்பன் கால்வாய் தூர்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அப்படி தூர்க்கப்பட்டால் அதிலிருந்து அந்த கால்வாய் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கும் மற்றும் 58ஏரிக்கும் நீர் நிரப்புவது நின்று விடும்,இது இயற்கைக்கு எதிரானது,செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிடைக்கின்ற குடி நீர் ஆதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்று விசிக … Read more

டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ் ; 3 நாள்கள் முகாம் – திடீர் பயணத்திற்கு என்ன காரணம்?

அதிமுக தலைமை பிரச்சனையை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு ரத்துசெய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.   இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என தனி நீதிபிதி தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான … Read more

புதுவையை தொடர்ந்து கடலூரிலும் பரவும் வைரஸ் காய்ச்சல்; மருத்துவமனையில் குவியும் மக்கள்!

கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவைக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காலை முதல் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் சிகிச்சை பெற … Read more

நீட் தேர்வை மிஞ்சிய டிஎன்பிஎஸ்சி: 'வெளியில் போகக்கூடாது, அடக்கிக்கொள்ளுங்கள்' – தேர்வறையில் பெண்ணுக்கு நடந்த அவலம்…

தமிழ்நாடு அரசு துறைகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும், GROUP-8 தேர்வு கடந்த செப். 11ஆம் தேதி நடைபெற்றது.  இத்தேர்வு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திலும் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்ற தேர்வில், தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வறையில் இருக்க வேண்டும் … Read more

திபெத்தில் அத்துமீறும் சீனா… DNA தரவுகள் மூலம் கணக்காணிப்பு நடவடிக்கை!

திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பான சம்பவம் தற்போது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்று சீனா தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தற்போது உயிரியல் தரவுகள் மூலம் திபெத் மக்களை கண்காணிக்க சீனா பெரிய அளவிலான டிஎன்ஏ சோதனையை நடத்துகிறது. திபெத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களில், பயோ – செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த … Read more

தமிழகத்தில் 'இந்த' மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல்

TN Weather Forecast: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  19.09.2022 மற்றும் 20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 21.09.2022 மற்றும் 22.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் … Read more

ஹிஜாபை எரித்து, தலைமுடியை வெட்டி எதிர்ப்பு – ஈரான் இளம்பெண் மரணத்திற்கு கடும் போராட்டம்

ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண்ணை அந்நாட்டு போலீசார் விசாரணையின்போது அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஈரானிய பெண்கள் தங்களின் ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  22 வயதான மாஷா அமினி, ஈரானின் காவலர்களால், ஹிஜாபை முறையாக அணியவில்லை என்பதால் கைதாகியுள்ளார். போலீசார் விசாரணையை அடுத்து நீண்ட நாள்களாக கோமாவில் இருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை (செப். 16) உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

ராகிங்கிற்கு எதிராக யுஜிசி எடுத்த அதிரடி முடிவு!

கல்லூரி செல்ல வேண்டும் மாணவர்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கிறதோ அதேயளவு பயமும் இருக்கிறது, அதற்கான காரணம் கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தான்.  பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு படிக்கிறார்கள் என்று ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் ராகிங்கால் தங்களது பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்று மறுபுறம் பயப்படவும் செய்கிறார்கள்.  கல்லூரிகள் மட்டுமல்ல சில சமயம் பள்ளிகளிலும் ராகிங் நடைபெறுகிறது, ராகிங்கால் மனமுடைந்து சில மாணவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.  பொழுதுபோக்காக தெரியும் ராகிங்கிற்கு பின்னால் உயிரை … Read more

யூடியூப்பில் நடைமுறைக்கு வந்த புதிய அம்சம்; வருமானம் எகிறபோகுது

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களுடன் போட்டியிட YouTube தயாராகி வருகிறது. நீங்கள் ஷார்ட்ஸ் (Youtube Shorts) உருவாக்கும் கிரியேட்டராக இருந்தால், நிறைய பணம் சம்பாதித்து நீங்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அது என்னவென்றால், மானிடைசேஷனைக் கொண்டு வர யூ டியூப் திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி, ஷார்ட்ஸ் வீடியோக்கள் இப்போது YouTube கிரியேட்டர்ஸ் பார்ட்னர் திட்டத்தில் சேர்க்கப்படும். அதாவது இதற்குத் தகுதி பெறும் படைப்பாளிகள் விளம்பரம் … Read more