கனியாமூர்: கலவரத்தால் சீர்குலைந்த பள்ளியின் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி, கனியாமூரில்  ஜூலை 17ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. மாணவி படித்த பள்ளியான சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த கலவரக்காரர்கள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர். இந்த கலவர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், இதுவரை யாரும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் … Read more

9 அடியில் 1700 முறை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து மாணவன் சாருகேஷ் சாதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். தனியார் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை போற்றும் வகையில் 17 மணி நேரத்தில் அவர் பிறந்த மாதமான ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில், 9 அடியிலும் சுமார் 1700 முறை அவரது பெயரை பயன்படுத்தியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளி … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள். அப்படி என்ன செய்துள்ளார் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்து பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் … Read more

பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லும் சடங்கு ஊர்வலங்கள், பின்னர் வின்ட்சரில் அவர் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு எடுத்து செல்வது என ராணியின் பயணம், பிரிட்டிஷ் முடியாட்சியின் பண்டைய மரபுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலங்கள் மாறினாலும் தங்கள் மரபை மாற்றாமல் அரச குடும்பம் பல நூற்றாண்டு பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுகிறது. பிரிட்டனின் ராயல் நேவி பணியாளர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை பீரங்கி வண்டியில் வைக்கப்பட்ட … Read more

பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

தமிழ் திரையுலகில் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்துகொள்ள போகும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தான்.  அனைவரும் எதிர்பார்த்தபடியே கடந்த ஜூன்-9ம் தேதி நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.  திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் இந்த இருவரின் திருமண புகைப்படங்கள் ரசிகர்களின் டைம்லைனை ஆக்கிரமித்து இருந்தது.  திருமணம் முடிந்த பிறகும் இவர்கள் அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களும் இணையத்தை அலங்கரித்து … Read more

செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் பறிபோகும் உயிர்கள்

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விக்னேஷ்(20), கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ்(16), 12ம் வகுப்பு படித்து வந்தார்.  இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதகின் அருகே இறங்கி நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து முழ்கினார்கள். இதனை … Read more

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாஜக பிரமுகர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பா.ஜ. பிரமுகர் உள்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.  சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து,  வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்படி, சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த … Read more

44 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் ஆகும் கமல்-ரஜினியின் படம்?

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றளவு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  அன்றிலிருந்து இன்றுவரை இருவரின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறைந்தபாடில்லை, இந்த இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் திரையரங்குகள் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.  கமல்-ரஜினி இருவரும் தற்போது தனித்தனியாக தான் நடித்து வருகின்றனர், ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த இருவரும் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.  ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் … Read more

சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம்,  நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை  உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா?  நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்.  அந்த வகையில் … Read more

பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அண்டை நாடுகளுக்கு செல்லும் இலங்கை மக்களில் சிலர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்ததால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள்ல் கோரிக்கை விடுத்துளனர். தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக அவர்கள் முயன்றனர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள், இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த … Read more