பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும்: தொல் திருமாவளவன்

மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடமான உரிமை களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்,  சனாதனத்தை வேரறுக்க போராடிய கருத்தியல் போராளி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளில் இந்தியாவை சூழ்ந்துள்ள சனாதனத்தை கோலாச்ச துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் … Read more

சுகாதாரமற்ற குடிநீரால் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் பலி – சாயல்குடியில் சோகம்

ராமநாதபுரம் சாயல்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, சரிவர பராமரிக்காததால் மஞ்சள் காமாலை நோய் தாக்கி அரசுப்பள்ளி மாணவன் மற்றும் மாணவி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தனர். சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரோச்மா நகர், பிழை பொருத்தம்மன் குடியிருப்பு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் … Read more

புரட்டாசி பிறந்தாச்சி: வெறிச்சோடிய காஞ்சிபுரம் மீன் சந்தை, விலை ஏற்றம்

பொதுவாகவே வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சி உணவுகளை உண்பதற்காக அதிகளவில் இறைச்சிகளை கடைகளை நாடியும், மீன் சந்தைகளிலும் அதிகளவில் குவிவர். அந்த வகையில் காஞ்சிபுரம் பென்னேரிக்கரை மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் கூட்டமானது அலைமோதி காணப்படும்.ஆனால் புரட்டாசி மாதம் இன்று பிறந்ததையொட்டி அச்சந்தையே அதிகளவு பொதுமக்கள் வரத்தின்றி வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது. மேலும் இன்று மீன் வரத்தானது குறைந்துள்ளதால் மீன்கள்  விலையானது கடும் ஏற்றத்தை கண்டுள்ளது. … Read more

அண்ணா பற்றி தெரியுமா?… எடப்பாடி பழனிசாமிக்கு புத்தகங்கள் அனுப்பிய சிவசேனாபதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி எழுதியிருக்கும் கடிதத்தில், “ உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களிலேயே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள்களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று  அறிவேன்.  ஆதலால்  அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க என்று தினந்தோறும் கூறி, ஆட்சி நடத்திய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் … Read more

யாருக்கு உதவினாலும் இனி நான் காலில் விழுவேன் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநர் மட்டுமின்றி நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்திருப்பவர். சினிமாவில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் பலருக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். அவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “’நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். … Read more

அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ரெடி பண்ணுங்க – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எச்1என்1 வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது. சுவாசக் குழாயை பாதிப்படையச் செய்யக் … Read more

Video – தைவான் நிலநடுக்கம்; பொம்மை போல் குழுங்கிய ரயில் – சுனாமி எச்சரிக்கை

தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், முதலில் 7.2 அளவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 6.9 அளவாக குறைந்ததாக ஆய்வு மையம் கூறியுள்ளது. அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த, பொம்மை ரயில் போன்று குழுங்கிய வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த ரயில் குழுங்குவதை பார்க்கும்போது, அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என்பதை … Read more

ஆ.ராசா மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தினால் பொறுக்கமாட்டோம் – சீமான் கொந்தளிப்பு

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. … Read more

பொன்னியின் செல்வனை இவ்வளவு நாள் எடுக்காமல் இருந்தது நல்லதுதான் – மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன்படி படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், “எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் – விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான ஆள் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலக்கழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய இரு பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. … Read more