நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

திருச்செந்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்காமல் அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்த பெண்ணிற்கு இன்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது … Read more

திமுக தலைவர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்தவர்கள்: அதிமுக ஜெயக்குமார் சாடல்

சென்னை: ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்த பழமொழியாக அரசியலில் நாகரீகமில்லாத வார்த்தைகளை பேசி வாங்கி கட்டி கொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார் என்று சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். திமுக தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து அதன்பின்னர் கலைஞரால் அரசியலில் நுழைந்தார் என்று திமுகவை பற்றி காட்டமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமியை  விமர்சனம் … Read more

சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மாட்டோம் என்று கூறிய கடைக்கு சீல்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்றும் ஊர் கட்டுப்பாடுள்ளது என்றும் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரமூர்த்தி  என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம் பஞ்சாகுளம் இந்த கிராமத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் … Read more

அதர்வாதான் எங்கள் பலமே – புகழாரம் சூட்டிய இயக்குநர்

டார்லிங், கூர்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்கள் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் சாம் ஆண்டன். இவர் தற்போது அதர்வாவை வைத்து ட்ரிகர் என்ற படத்ஹ்டை இயக்கியிருக்கிறார். ட்ரிகர் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் … Read more

அரசு செயல்படுவதற்கு நானே ஊக்கி – கமல் ஹாசன் பெருமிதம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 15ஆம் தேதி கோவை சென்றார். அதனையடுத்து அவர் நேற்று தனியார் திரையரங்கில் நடந்த விக்ரம் படத்தின் 100ஆவட்ஜி நாள் வெற்றி விழாவில் பங்கேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற கமல், அங்கு படிக்கும் மாணவிகளுடன்  கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். அப்போது … Read more

ட்ரெண்டான'மல்லிப்பூ’ பாடல் உருவானது எப்படி?… அனுபவம் பகிரும் பாடலாசிரியர் தாமரை

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய ‘ஐந்து நெருப்புகள்’ என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படம் மட்டுமின்றி படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பா படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை தாமரை எழுதியிருந்தார்.  மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இந்நிலையில் மல்லிப்பூ பாடல் உருவான … Read more

விடியல் இல்லை, விலை ஏற்றம் மட்டுமே உள்ளது: அரசை சாடும் அண்ணாமலை

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்றும், பால், மின்சாரம், சிமெண்ட், செங்கல், மணல், என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு மக்கள் அவதியில் ஆழ்ந்துள்ளார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.   ‘திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது. மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல … Read more

380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருதயம் எப்படி இருந்தது? அபூர்வ தகவல்கள் தரும் இதயம்

சிட்னி: உலகின் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில், 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது. பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. மனித உடல்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள கோகோ அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மீன்களின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புதைபடிமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் … Read more

சேவையின் அடையாளம்தான் மோடியின் வாழ்க்கை – நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமித் ஷா

பிரதமர் மோடி இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சியினர் முதல் கட்சியினர்வரை பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சரும், மோடியின் உற்ற நண்பருமான அமித் ஷா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளைக்கூட பிரதமர் மோடி சாத்தியமாக்கியுள்ளார். நல்ல நிர்வாகம்,வளர்ச்சி, தேசப்பாதுகாப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகள் … Read more

ஆத்தாடி… இத்தனை கெட்டப்பா! – சிறுத்தை சிவா படத்தில் சூர்யா புது முயற்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற இந்த நடிகர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.   சூர்யா இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தின் பிரம்மாண்டமான மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.  … Read more