பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்: ஜிஜி சிவா

சென்னை: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா கேட்டுக் கொண்டுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பச்சமுத்துவிற்கு  பெரம்பலூர்  தொகுதி ஒதுக்கப்பட்ட  நிலையில், பச்சமுத்துவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் … Read more

பாகுபலி நடிகருடன் 'தேவசேனா' அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தமிழ் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர், அருந்ததீ போன்ற பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  இவருக்கு வயது 40. இவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் அடிக்கடி செய்தியாகும். மேலும், இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை இருவரும் உறுதிசெய்யவில்லை.  அனுஷ்கா – பிரபாஸ் ஆகியோர் இணைந்து பில்லா (தெலுங்கு), மிர்சி, பாகுபலி … Read more

திருமாவளவன் பட்ட அசிங்கத்தை நானும் படணுமா? – சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாலராக சீமான் இருக்கிறார்.நாடாளுமன்றம், சட்டப்பேரவை என எந்தத் தேர்தல் நடந்தாலும் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் நாம் தமிழர் கட்சி அவ்வாறு செயல்படுவதால் வாக்குகள் பிரிந்துவிடுவதாகவும், அது மாநில நலனுக்கு பாதகமாக அமையும் என்றும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்றும் பேசப்படுகிறது. இந்தச் சூழலில் விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் … Read more

ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது – கமலை வறுத்தெடுக்கும் வானதி

கோவை சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் … Read more

சர்வதேச கடலோர தூய்மை தினம் – மெரினாவை சுத்தம் செய்த நடிகை

கடலில் ஏற்படும் மாசுக்களில் 80 விழுக்காடு நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதன் மூலம் அதனை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மனிதர்களின் … Read more

இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார்  சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மாலை அணிவிக்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், ‘சமூக நீதியின் வழியே ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்ட அனைத்து  ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் … Read more

சிறுத்தைகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு – கூண்டை திறந்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி!

இந்தியாவில் சிறுத்தை (Cheetah) இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ஆம ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு  காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிவை கண்டது. ஆசியாவிலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த சிறுத்தை இனம் அழிந்து சுற்றுச்சுழலின் உணவு சங்கலி பாதிக்கப்பிற்கு உள்ளாகலாம் என சூழலியல் வல்லுநர்கள் கூறி வந்தனர்.  இதை தொடர்ந்து, அரை நூற்றாண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ‘Project Cheetah’ என்ற திட்டத்தை, … Read more

எதுக்கு தேடுறீங்க நான் என்ன கொலைகாரனா?… ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்

வலிமை படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக படத்துக்கு ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்ஹ்டின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் தற்போது பைக் ரைட் செய்துவருகிறார். இதற்காக அவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி … Read more

'லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை தான் செய்கிறது' – ஓபிஎஸ் கொடுத்த ஷாக்

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.  அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,”சாதாரண கிராம புறங்களில் பிறந்தவர் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றி கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கப்பட்டு, ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அவருக்கு அதிமுக … Read more