ராகவேந்திரா சித்த மருத்துவமனையின் வெள்ளி விழா – குவிந்த பிரபலங்கள்

சென்னையில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரா சித்த மருத்துவமனையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சுதா சேஷையன், “இன்று இருக்கக்கூடிய வாழ்கைமுறையை இயற்ககை முறையோடு அல்லது அதிலிருந்து விலகி நிற்கிறது. அறுபது வயதில் எட்டிப்பார்த்த நோய்கள் இருபது வயதில் எட்டி பார்த்து வருகின்றன. இயற்கைக்கு மாறாக செயல்பட்டு கொண்டே இருந்தால் நோய்கள் அதிகமாகி கொண்டே போகிறது.  இயற்கையோடு வாழும் முறை முற்றிலும் … Read more

‘காட்டு பசில இருக்கேன்’ – மெகா திட்டத்துடன் களமிறங்கியிருக்கும் சிம்பு

தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்களை அதிகம் பார்த்தவர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. நீண்ட நாள்களுக்கு பிறகு அவர் நடித்த ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் அதற்கு அடுத்து நடித்த மாநாடு படம் சிம்புவின் செகண்ட் இன்னிங்ஸுக்கு நல்ல ஓபனிங் கொடுத்தது. 100 கோடி ரூபாய் வசூல் செய்த அப்படத்துக்கு பிறகு சிம்பு மீண்டும் பிஸியாகியுள்ளார். அதன்படி, விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படம் கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த சிம்பு வெந்து தணிந்தது … Read more

இதற்காகத்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை – எஸ்.ஜே. சூர்யா விளக்கம்

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்கம் மட்டுமின்றி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்த நியூ படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கதாநாயகனாக நடித்த படங்கள் தோல்வியடைய சில காலம் இயக்கம், நடிப்பு உள்ளிட்டவைகள்லிருந்து விலகியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இசை என்ற படத்தை இயக்கி நடித்தார். மேலும் அப்படத்துக்கு இசையமைக்கவும் செய்தார். அந்தப் படமும் கலவையான … Read more

அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – அண்ணாமலை கடுமையான விமர்சனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வந்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அவர்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவின் பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.  இந்த … Read more

கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்க்கும் சூர்யா?

பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் மதுரையை மையமாக வைத்து வந்த தமிழ் சினிமாக்களில் ஜிகர்தண்டா தனித்து தெரிந்தது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜின் … Read more

எல்பின் நிதி நிறுவன மோசடி – ஏமாற்றியவர்களை தேடி பிடித்து கட்டிவைத்து தாக்குதல் !

திருச்சியை தலையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர் அழகிரிசாமி என்கின்ற ராஜா. ‘அறம் மக்கள் அறக்கட்டளை’ என்ற பெயரில் சமூக சேவகர் போல போர்வை போற்றிக்கொண்டு மோசடிகளில் ஈடுபடுவதுதான் ராஜாவின் முழு நேரப் பணி. இவரும் இவர் சகோதரர் ரமேஷும் சேர்ந்தும், தங்கள் நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், பத்து மாதத்தில் இரண்டு மடங்காக திரும்பி தரப்படும் என்று புருடா விட்டு பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் எல்பின் … Read more

விஜய்க்கு அபராதம் – தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். இவர் கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற … Read more

நாட்டில் முதல்முறையாக தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: கனிமொழி கருணாநிதி பெருமிதம்

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மதுரையில் துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவங்கி வைத்தார். பின்னர் கனிமொழி … Read more

ராஜ்கமல் நிறுவனம் விரைவில் 100வது படத்தை தயாரிக்க வேண்டும்: கமல்ஹாசனின் ஆசை

கோவை: கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திரையரங்க ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கிய கமல்ஹாசன், நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். ”சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் என்னை நீ தான் அந்த பிள்ளை என … Read more

ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு இன்று முதல் அமல்

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.  உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலை விவரம்:   * 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து … Read more