ஆவடி: விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு … Read more

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ளது வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. வெந்து தணிந்தது காடு படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகிறது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் … Read more

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு முறை பயணமாக மதுரை சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி … Read more

எப்படி இருக்கு வெந்து தணிந்தது காடு?… கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் வெந்து தணிந்த காடுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்தப் படமானது உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புக்கேற்றார்போல் படம் வெளியானதை சிம்பு ரசிகர்கள் … Read more

பிற மொழிகள் இந்திய அலுவல் மொழியாவது எப்போது? தமிழக முதல்வர் கேள்வி

சென்னை:  இது இந்தியாதான்…‘ஹிந்தி’யா அல்ல!” “தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக!” என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்… ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்றும், “நாட்டின் ஆட்சி … Read more

எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். … Read more

பெங்களூரில் இருக்கும் நடிகை மீரா மிதுன் விரைவில் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவார்

சென்னை: நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, தமிழ்ச்செல்வி என்கிற மீராமிதுன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து … Read more

வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!

அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை நீங்கள் திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரது கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வர வைக்கப்பட்டு சில நொடிகளில் கோடீஸ்வரரானார். அதன்பிறகு அந்த பெண் சுமார் ஒரு வருடத்திற்கு கண் மூடித்தனமாக பணம் செலவழித்துள்ளார். இந்த ஆச்சரியமான தற்செயல் நிகழ்வினால் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண் கன் இமைக்கும் நேரத்தில் … Read more

வேகமாக பரவுகிறது ஓமிக்ரானின் புதிய வகை BA.4.6: உஷார் மக்களே!!

லண்டன்: மக்களே உஷார்!! வேகமாக பரவி வருகிறது கோவிட் தொற்றின் மற்றொரு வகை!! அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரானின் துணைவகையான BA.4.6, தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) கோவிட் மாறுபாடுகள் குறித்த சமீபத்திய சுருக்கமான ஆவணம், ஆகஸ்ட் 14 -ல் துவங்கிய முதல் வாரத்தில், இங்கிலாந்தில் BA.4.6 மாதிரிகள் 3.3 சதவீதமாக இருந்தன என்று குறிப்பிட்டது. இதேபோல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைகளில் … Read more

மருந்து தட்டுப்பாடே இல்லை போலியாக வதந்திகளை பரப்புவது ஏன்? அமைச்சர் காட்டம்

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். அதனைதொடர்ந்து மகப்பேறு உதவி வழங்கும் திட்டம், பிறப்பு சான்றிதழ், சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை 25 பயணாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியாக பரப்பப்படும் கற்பனை என்று தெரிவித்தார். … Read more