சுதந்திர வேட்கையில் அடிப்பணியாத இந்தியா : சில முக்கிய நிகழ்வுகள்!

1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு.., ” இந்திய நாட்டின் முதல் பிரதமராக சுதந்திர கொடியை முதலில் ஏற்றிய பிரதமராக மறைந்த ஜவஹர்லால் நேரு உரையாற்றினார். அப்போது அவர் “நீண்ட நெடுங்காலத்துக்கு முன் “விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்”. அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்” என உறுதிமொழி எடுத்தார்.  அந்த உறுதி மொழிக்குப் பிறகு ஆண்டு … Read more

பெரியாரின் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணன் கைது

மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டமொன்றில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், பிரபல சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்க கோயிலுக்கு முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாளாக இருக்கும் என்றார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய விவாதமாக மாறியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்தினர். சூழல் இப்படி … Read more

SBI Hikes MCLR Rates: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வட்டி விகித உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை அளித்து வருகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பெயரும் இந்த வங்கிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு … Read more

11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை தொடரும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம் எனவும், நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்  எனவும் … Read more

சீனாவை சீண்டும் அமெரிக்கா; நான்சி பெலோசியை தொடர்ந்து ‘இவர்களும்’ தைவான் பயணம்!

சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசியா பயணம் சென்றிருந்தார். அவர் தனது ஆசிய பயணத்தின் போது தைவானிற்கும் பயணம் மேற்கொண்டார். நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு சீனா கடும் கோபமடைந்தது. இதன் பிறகு தைவானைச் சுற்றி போர் பயிற்சி கொண்டு தைவானை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியது. ஆனால், அமெரிக்கா விடுவதாக இல்லை. தைவானை தொடர்ந்து தற்போது மீண்டும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தைவான் … Read more

Tamil Nadu Weather: தமிழகத்தின் வானிலை எப்படி? மழை வருமா? வராதா?

தமிழ்நாடு வானிலை தகவல்: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை (16.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் … Read more

விருதுத்தொகையை திருப்பிக் கொடுத்து திகைக்க வைத்த நல்லக்கண்ணு

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். இதில்,  ’தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் … Read more

வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதை காங்கிரஸ் எதிர்க்கும் -சோனியா காந்தி

புது டெல்லி: தனது 75வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி “இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து” தெரிவித்துள்ளார். இதனுடன், சுதந்திரப் போராட்ட தியாகிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக உண்மையை மறைத்து … Read more

Independence Day 2022: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், உறவுமுறை, ஊழல் மற்றும் பெண்களுக்கு மரியாதை குறித்து பேசினார். உரைக்கு முன் ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகாத்மா காந்தியை வணங்கினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது., * பிரதமர் மோடி உரையைத் தொடங்கிவைத்து, 75 ஆண்டுகள் … Read more

அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்!

இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். பின்பு பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.  முக ஸ்டாலின் பேசியதாவது, ” ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலை படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப … Read more