மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு பேருந்தில் பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

வேலூர்: அரசு பேருந்தில் பயணித்த மாணவிக்கு இரவில் நேர்ந்த கொடுரம் கேட்பவர்களை பதபதைக்கச் செய்கிறது…ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். கல்லூரியில் தொடர் விடுமுறைகள் வந்ததால், மருத்துவக் கல்லூரி மாணவி, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழக அரசு (SETC) பேருந்தில் ஏறி வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார். அப்போது மாணவி இரவில் உறங்கும் … Read more

சேலம் அருகே காணாமல் போன கிணற்றை மீட்ட அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு கிணறு அமைத்து கொடுத்திருந்தது. பொது கிணற்றில் இருந்து மக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால், கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்தது. அந்த கிணறு தனியாரால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு, மூடி மறைக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கிணற்றை மீட்க நீண்ட … Read more

தீண்டாமைக் கொடுமைக்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அண்ணாமலை

சென்னை: சமூக நீதியில் தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 13) மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தீண்டாமை குறித்து தெரியப்படுத்தியவுடன், அதற்கான சிறப்பு அரசாணையை தமிழக … Read more

ஒரே வருடத்தில் உயர்ந்த நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பிரபலமாக இருப்பவர்களின் சொத்து மதிப்புகளை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கும்.  அப்படி பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரம் தான், தற்போது அவரது முழுமையான சொத்து மதிப்பு விவரம் என்ன என்பது பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  நரேந்திர மோடியின் சொத்துக்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களின் சொத்துக்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கின்றது.  அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் … Read more

பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினார் நிதிஷ்குமார்?

பீகாரில் நடந்த அரசியல் நகர்வுகளை சற்றே திரும்பிப் பார்ப்போம். கடந்த 2020-ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  பீகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், … Read more

பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு: இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து

வடக்கு வர்ஜீனியாவில் உள்ள புல் ரன் மலைகள் காப்பகத்தில் (Bull Run Mountains Natural Area) பாம்புகளை கணக்கெடுக்கும் பணியில் இருந்த  மார்ட்டின் பாம்பு கடித்து இறந்து போனார். தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதற்கும் கணக்கிடுவதற்கும் கடுமையான மலைப் பயணங்களை மேற்கொண்ட மார்ட்டின் உலக புகழ்பெற்ற பாம்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாள் முழுவதையும் பாம்புகளுக்காகவே செலவழித்த அவரின் மரணமும் பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. டிம்பர் ரேட்லர் என்று … Read more

5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை

தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு நிதிஷ்குமாரின் செயல் பெரிய ஆச்சர்யத்தைத் தந்திருக்காது. ஏனினில் அவர் கூட்டணியை உடைப்பது இது முதல் முறையல்ல.  மாணவப் பருவத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் லாலு பிரசாத்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட்ட நிதிஷ்குமார், 1990-ம் ஆண்டு, ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராவதில் பெரும் பங்கு ஆற்றினார்.  பின்னர், கட்சிக்குள் லாலுவின் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு பிரிந்து வந்து, மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் இணைந்து … Read more

சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி தேசிய கொடி ஏற்றுவோம் – ரஜினிகாந்த்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசியக்கொடிக்கு கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இருக்கும் … Read more

இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32… 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை

புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வருடங்களில், கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வியக்கத்தக்க அளவில் முன்னேறி தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா, நூற்றுக்கணக்கான ஆண்டு அந்நிய ஆட்சியால் வறுமை மற்றும் சீர்கேட்டின் புதைகுழியில் சிக்கியிருந்தது. சுதந்திரம் அடைந்து  75 ஆண்டுகாலப் பயணத்தில், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பீடுநடை போடுகிறது இந்தியா. கடந்த 75 ஆண்டுகளில், உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் … Read more

ஹஜ் மானிய தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்ற தெரிவிக்கும் ஹாஜிக்கள்

சென்னை: தமிழக அரசு ஹஜ் மானிய தொகை உயர்த்தி வழங்கியிருப்பது இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக,தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், ஹஜ் கமிட்டி உறுப்பினரும் நாகூர் தர்கா பிரசிடன்டுமான செய்யது முஹம்மது கலீபா சாஹிப் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெயிட்ட அறிக்கையில், ஒன்றிய அரசு ஹஜ் விமான பயண கட்டணத்திற்கான மானியத்தை நிறுத்தியது, அதனை ஈடு செய்யும் வகையில்  தமிழக அரசு மானிய தொகை வழங்க தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் தலா … Read more