சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

லாங்யா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஆகும். சீனாவில் மேலும் 35 பேருக்கு ஜூனோடிக் லாங்யா வைரஸ் (LayV) இருப்பது உறுதி செய்யப்பட்டது. தைவான் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (TCDC) தகவலின்படி, சீன நிலப்பரப்பில் உள்ள ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் இந்த தொற்றுநோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸைக் கண்டறியவும் அதன் பரவலைக் கண்காணிக்கவும் நியூக்ளிக் அமில சோதனை நடைமுறைகளைப் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தைபே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது … Read more

Monkeypox நோய்த்தொற்று குழந்தைகளுக்கும் பதிவானது! பீதியை கிளப்பும் குரங்கம்மை

குரங்கு பாக்ஸ் வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜெர்மனியில் நான்கு வயது குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பபட்ட இருவருடன் வசித்துவந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கு காய்ச்சலின் பரவலை உறுதிப்படுத்தியது. ஜெர்மனியில் இதுவரை 2,900 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்ப்பரவல் … Read more

முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI சோதனை; வளரும் நாடுகளில் மட்டுமே இது நடக்கும் என டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தியது. இந்த தகவலை அளித்த டிரம்ப், ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே இதுபோன்ற “தாக்குதல்” நிகழ்கிறது என்று கூறினார். புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இது நம் நாட்டிற்கு மோசமான நேரம், ஏனென்றால் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் உள்ள எனது அழகான வீடு FBI முகவர்களின் … Read more

விந்தணு – கருமுட்டை இல்லாமல் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாகியுள்ள செயற்கை கரு!

உலகின் முதல் செயற்கை கரு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர். குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன்-விட்ரோ கருத்தரித்தல், அதாவது IVF நம்பிக்கையாக வந்தது. இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது. இப்போது தொழில்நுட்பம் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. இதில், கருவைத் தயாரிக்க … Read more

ஜி ஜின்பிங்கின் அடக்குமுறை… வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 6,00,000 சீனப் பிரஜைகள்!

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் வீடியோ கேம்களை விளையாடுவதற்கு அனுமதிக்கப்படும் மணிநேரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், பிரபல ரசிகர்களின் கலாச்சாரத்தை முறியடித்தல் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் … Read more

நாள் முழுவதும் கணினியில் வேலையா… இந்த 7 உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற … Read more

இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு

பங்களாதேஷில் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல்-டீசல் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிபொருட்களின் விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் அமலுக்கு வந்த புதிய விலையின்படி, ஒரு லிட்டர் ஆக்டேன் விலை தற்போது 135 டாக்காவாக மாறியுள்ளது, இது முந்தைய விலையான 89 டாக்காவை விட … Read more

தீவிரமாக சேதமடைந்த உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம்: ஒரு உலை மூடப்பட்டது

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (2022 ஆகஸ்ட் 5)  ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் “கடுமையான சேதத்தை” அடைந்தது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று … Read more

World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, … Read more

மந்தமான விற்பனை! செலவுகளை குறைக்க 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய அலிபாபா

Alibaba Fired Employees: சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, மந்தமான விற்பனை மற்றும் நாட்டில் நிலவும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றின் மத்தியில் செலவினங்களைக் குறைக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களை 245,700 ஆக குறைத்தது. ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஹாங்சோவை தளமாகக் கொண்ட அலிபாபாவை விட்டு வெளியேறினர். ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் அலிபாபாவின் பணியாளர்கள் 13,616 ஆகக் … Read more