Viral Video: விண்வெளியில் சேட்டிலைட் எடுத்த செல்ஃபி….

2013 ஆம் ஆண்டில், ‘செல்ஃபி’ என்ற வார்த்தை  ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ‘word of the year’ ஆகும். முந்தைய ஆண்டுகளில் இந்த கருத்து புதியதாக இருந்தது. ஆனால் அப்போதிருந்து, இந்த வார்த்தையும் செல்ஃபி புகைப்படங்களும் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வார்த்தையாகவும் அங்கமாகவும் ஆகி விட்டது.  நாம் எந்த இடத்திற்கு போனாலும், அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையில்  செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. குடும்ப விழாக்களின் போது, செல்ஃபியைக் கிளிக் செய்யாதவர்கள் யாராவது உண்டா என்ன. நாம் … Read more

இலங்கையில் கடும் நெருக்கடி: எரிபொருள் வாங்க வருவோரை தாக்கும் ராணுவம், வீடியோ வைரல்

எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முடக்கப்படும் நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில்,  எரிபொருள் வாங்க வருவோரை ராணுவம் கொண்டு அடக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு உள்ள இலங்கை அரசால், எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்க அதிகாரபூர்வமாக தீர்மானிக்க முடியவில்லை என்றாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக  இந்த வாரம் நாடு ஊரடங்கை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி நாட்டை பாதித்துள்ள … Read more

போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில்,  முக்கிய திருப்பு முனையாக, உக்ரேனிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3), லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரக்கணக்கான கடுமையான சண்டையைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் பின்வாங்கியது.  ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சர் செகேய் ஷோய்கு,  நேற்றே,  லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். எனினும்  கோரிக்கையை உக்ரைன் அதிபர் … Read more

வேலை இழந்து பரிதவிக்கும் 12,000 ஐடி ஊழியர்கள்!

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக க்ரஞ்ச்பேஸ் தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் தொழில்நுட்ப துறையில் வேலை இழந்தவர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெரும்பாலானோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, இன்னும் சரிவில் இருந்து மீளாத நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படிக்க | Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! – வந்தாச்சு புது ரூல்ஸ்! … Read more

வீடு வாங்கலையோ வீடு: தர்பூசணிக்கு பதிலாக வீட்டை விற்பனை செய்யும் சீன ரியல் எஸ்டேட்

பொருளாதார சிக்கல்களால் சீனா மீண்டும் பண்டமாற்று முறைக்கு மாறுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போது சீனாவில், சொத்து சந்தையில் ஏற்பட்டிருக்கும் அதல பாதாள சரிவு மக்களுக்கு வீடு வாங்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நிலை தான் திண்டாட்டமாகிவிட்டது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல், தர்பூசணிகள், பீச் மற்றும் பிற விவசாய பொருட்களின் வடிவில் வீடுகளுக்கு பணம் வாங்கப்படுவதாக சீன அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. Chinese … Read more

Sudan protest: சூடானில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களில் 9 பேர் பலி

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வன்முறை ஒடுக்குமுறையில் 9 பேர் கொல்லப்பட்டனர் சூடான் நாட்டில் 2019ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டது. அதையடுத்து, ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த (2022) அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக ராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தே அல் புர்ஹான் புரட்சியை தொடங்கினார். சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக்கை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அப்துல்லா ஹம்தக் பதவியில் … Read more

UFO: பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா? பறக்கும் தட்டு எழுப்பும் கேள்விகள்

நாம் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா? வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையா? பறக்கும் தட்டுகளில் வருவது யார்? வேற்று கிரகவாசிகள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனரா? அசாதாரணமான வான்வழி நிகழ்வுகளின் வினோதமான மற்றும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகள் தொடர்பான நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.  அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களை (unidentified flying objects) பார்த்ததாக பல தசாப்தங்களாக மக்கள் கூறிவருகின்றனர்.  ஆனால் இதுபோன்ற கூற்றுகளை கண்டித்து, இவை அனைத்தும் காட்சிகளை புரளிகள் இட்டுகட்டியவை என்றும் சிலர் சொல்கின்றனர். மேலும் படிக்க … Read more

தாக்குதல் கால்பந்து விளையாடவே விரும்புகிறேன் – சென்னையின் எஃப்சி பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக்

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்காக சென்னையின் எப்சி அணி முழுமையாகத் தயாராகி வருகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஃபாவும் சென்னை வந்துவிட்டார். வரும் சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் முன்கள வீரரான தாமஸ் பிரட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த ஒன்றாம் தேதி சென்னை வந்தார். மேலும் படிக்க | பராக் ஸ்ரீவாஸ் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு … Read more

கம்பளிப்பூச்சி சாக்லேட் செம டேஸ்ட்: சிற்றுண்டிகளாக மாறும் பூச்சிகள்

சைவ உணவோ அல்லது அசைவ உணவஓ, உணவே மருந்து என்பது உலகம் உணர்ந்த உண்மை. அசைவ உணவே சிறந்தது என பெரும்பாலானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், சைவ உணவுக்காரர்கள் மட்டும் தங்கள் தரப்பை சொல்லாமல் விட்டு விடுவார்களா என்ன? சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும், உணவு உட்கொள்ளலின் அடிப்படை உயிர்வாழ்தலே. உயிர் வாழ்தல் என்ற அடிப்படை விசயம் முடிவடைந்த பிறகு, உணவின் சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உடல்நலன் என பல்வேறு பரிமாணங்கள் உணவைப் பற்றி பட்டியலிடப்படுகின்றன. வகைவகையாய் … Read more

உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா…

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் தீவிரமாக போரிட்டு வரும் நிலையில்,  லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செல்லலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒப்புக்கொண்டார். உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கிழக்கு மாகாணமான Luhansk-ல் தீவிரமான போர் மூண்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் கடைசி பெரிய கோட்டையான லிசிஸான்ஸ்க் நகரத்திற்கு உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகள் இரண்டும் தங்கள் கட்டுபாட்டில் இருப்பதாக உரிமை கோருகின்றன.  எனினும், லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் … Read more