புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்

நியூசிலாந்தில் சிகரெட் தடை: நியூசிலாந்தில் இனி, 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது. இதனால், இனி வரும் தலைமுறையினர் புகை பிடிக்க இயலாது.  இதற்காக நியூசிலாந்து அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யும் இந்த புதிய நியூசிலாந்து சட்டத்தின்படி,  இனி 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் 18 வயதை எட்டிய பிறகும் புகைபிடிக்க முடியாது. நியூசிலாந்து எம்.பி.க்கள் அனைவரும் இது குறித்த சட்ட … Read more

Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகமே அறியும். அதற்கு தனியான விளக்கங்கள் தேவை இல்லை. பல விதமான முயற்சிகளுக்குப் பிறகும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. இங்கு பணவீக்கம் விண்ணைத் தொடும் நிலையில் உள்ளது. இதனால் உணவு பொருட்கள், பானங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிங்கத்தின் விலை, எருமை மாட்டின் விலையை விட குறைவு. … Read more

யுத்தத்திற்கு நடுவில் உக்ரைன் அதிபர் தனது மனைவியுடன் நடத்திய போட்டோஷூட்

Zelenskyy Photoshoot: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஐந்து மாத காலங்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன், வோக் பத்திரிகைக்காக  போட்டோஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஒரு புகைப்படத்தில், ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். மற்றொரு படத்தில், இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். வோக் பத்திரிகை உக்ரைன் முதல் பெண்மணியின் புகைப்படத்தை வெளிட்டு, அதனை … Read more

Smuggling of Idol: தமிழக ஆலயத்திலிருந்து திருடப்பட்ட சிலை லண்டனில்!

நியூடெல்லி: தமிழகத்தில் இருந்து திருடுபோன பழங்கால சிலை லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலைப் பொக்கிஷங்கள் கடத்தல் குறித்து கடந்த காலங்களில் இதுகுறித்து குற்ற வழக்குகள் … Read more

தேர்தலுக்கு 290 நாட்களுக்கு பிறகும் அதிபரோ பிரதமரோ பதவியேற்கவிலை: இராக்

ஈராக்: மதகுரு மொக்தாதா சதரின் ஆதரவாளர்கள் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஈராக் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் போராட்டம் நடத்தும்போது அத்துமீறி நுழைந்தனர். அக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் குழுவே, நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் இன்னும்  அகலவில்லை.. பாக்தாத்தின் உயர்-பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த போராட்டாக்காரர்கள், புதன்கிழமைன்று … Read more

Viral Video: கடும் வெப்பத்தினால் பிளந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

சீனாவில் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில்,  கடுமையான வானிலை காரணமாக  பாலம் ஒன்று  பிளந்து இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நவ் திஸ் நியூஸ் (Now This News) ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கடுமையான வெப்பம் காரணமாக கியான்ஜோ பாலம் பிளப்பத்தை சித்தரிக்கிறது. பாலம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்த அன்று அது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.இந்த வீடியோ ஜூலை … Read more

IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி

Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் இயற்கையான நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும். ஆறு நாள், ஐந்து இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜில் காத்மாண்டு மற்றும் பொக்ரா ஆகிய இடங்களுக்கான பயணத்திற்கான கட்டணம் ரூ.38,400 மட்டுமே. இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) 6-நாள் மற்றும் 5-இரவு பயண திட்டத்திற்கு “நேபாளத்தின் இயற்கை” என்று அறிவித்துள்ளது. நேபாளத்தின் மிகவும் பிரபலமான கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களைச் சுற்றிப் பார்க்க அருமையான சந்தர்ப்பம் … Read more

ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா: பொறியியல் அதிசயம்

மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது. இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய … Read more

Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake in Philippines: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு … Read more

ஆறாய் ஓடும் நெருப்புப் பிழம்பு – பிரமிக்க வைக்கும் வீடியோ

ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் … Read more