ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள சவால்கள் என்னென்ன?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனால் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றதும் நாம் அறிந்ததே. அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கோத்தபய ராஜபக்ச, கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் அதிபர் இல்லத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பொதுமக்களின் போராட்டம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டும் அல்ல. ரணில் விக்கிரமிங்கசிங்கேவுக்கு எதிராகவும் தான் go home gota, go Ranil go ஆகிய முழக்கங்களைத் தான் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இலங்கை அதிபர் மாளிகை … Read more

பிரிட்டன் பிரதமர் பதவி – இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் – லிஸ் டிரஸ்

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். இதுவரை நடைபெற்ற 4 சுற்று வாக்குப்பதிவிலும், இந்திய … Read more

உலக அழிவு நெருங்குகிறதா… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்பது நீண்ட காலமாக மனிதர்களுக்கு பீதியை கொடுத்து வருகிறது. பூமி கிரகத்தின் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, உலக அழிவின் அச்சுறுத்தல் நினைத்தத்தை விட மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றி தெரிய வந்துள்ளது. நிபுணர்களால் முன்னர் நினைத்ததை விட மோசமானது என்று நம்புகிறது. ஃபிரான்டியர்ஸ் இன் தி எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் என்னும் சுற்றுசூழல் குறித்த இதழில் வெளியிடப்பட்ட … Read more

நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்!

விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் தரையிறங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது நடக்கவில்லை என்றும், இது அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட புரளி என்றும் இன்னும் சில கருத்துக்கள் நிலவி வருகிறது.  ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 மிஷன் இரண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கியது. மைக்கேல் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர மாட்யூலை இயக்கினர், இது விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அவர்களில் … Read more

Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் … Read more

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா

வாஷிங்டன்: தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதர்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது … Read more

Sri Lankan New President: இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது, எமக்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் … Read more

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்; வெப்ப அலையால் துவண்டு விழும் மக்கள்

ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி, ரஷ்யா உக்ரைன் யுத்தம் உணவுபொருள் பஞ்சத்தோடு, வரலாறு காணாத கடுமையான வெயிலும் மக்களை வாட்டுகின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் சில தினங்களாக ஐரோப்பாவினை முடக்கி போட்டுள்ளது. சாலையில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்திருக்கின்றன.  பள்ளிகள் இயங்குவதில் கடும் கட்டுப்பாடு, வெயில்கால நோய்கள் தடுக்கும் வழிமுறைகளை  அறிவித்துள்ளன. வெப்ப அலை தாக்குதலை எதிர்கொள்ளும் ஐரோப்பாவில் , கடும் வெப்பம் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கையும் … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியில் இருக்கிரார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க, 63 வயதான தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி மற்றும் இடதுசாரி ஜனதா விமுக்தியில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக உள்ளனர்.பெரமுன (ஜே.வி.பி) அனுரகுமார திஸாநாயக்கவும் அதிபர் … Read more

டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Twitter vs Elon Musk: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இடையிலான சட்ட மோதல் அக்டோபருக்கு ஒத்தி போடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்க முடிவு செய்த மஸ்க், 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். பிறகுக் நிர்பந்திக்க முடியுமா என்பதை தீர்மானிக்க இரு தரப்பினரையும் அக்டோபரில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான  ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எலான் மஸ்க். போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான … Read more