இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியில் இருக்கிரார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க, 63 வயதான தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி மற்றும் இடதுசாரி ஜனதா விமுக்தியில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக உள்ளனர்.பெரமுன (ஜே.வி.பி) அனுரகுமார திஸாநாயக்கவும் அதிபர் … Read more

டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Twitter vs Elon Musk: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இடையிலான சட்ட மோதல் அக்டோபருக்கு ஒத்தி போடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்க முடிவு செய்த மஸ்க், 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். பிறகுக் நிர்பந்திக்க முடியுமா என்பதை தீர்மானிக்க இரு தரப்பினரையும் அக்டோபரில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான  ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எலான் மஸ்க். போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான … Read more

நான்சி பெலோசி தைவான் சென்றால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா

பெய்ஜிங்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு பயணம் மேற்கொண்டால், சீனா உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது. அதுபர் பதவிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெலோசி, தைவான் செல்ல உள்ளார். நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை  ஒத்திவைக்க வேண்டியிருந்தது.  பெலோசியின் வருகை, “சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய … Read more

நீலத்திலிருந்து சிவப்பாக மாறிய பூமி; நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம்

பூமியில் வெப்ப அலைகள்:  பூமி தொடர்ந்து வெப்படைந்து வருகிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்த வண்ணம் உள்ளனர். பூமி கடுமையாக வெப்பமடந்து உள்ளது என்பதைக் காட்டும் படம் ஒன்ரை நாசா வெளியிட்டுள்ளது.  ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும் . இங்கு தட்ப நிலை 40 டிகிரி செல்சியஸை எளிதாக தாண்டி விடும். பல ஆண்டுகளாக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 13 … Read more

அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு

2022ம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்: உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள். ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்த நாஸ்ட்ராடாமஸ், 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாஸ்ட்ராடாமஸ் … Read more

UK politics: பிரதமர் ரேஸில் முந்தி செல்லும் ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தில், கேளிக்கை விருந்தில் பங்கேற்றது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவக்கு முக்கிய பதவிகொடுத்தது ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினமாஅ செய்யத் தொடங்கினர். இதை அடுத்து, கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எனவே புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை … Read more

சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர்… பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி

பண்டமாற்று முறையை பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். நாணயங்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத காலத்தில், அம்முறை முக்கிய பரிவர்த்தனை முறையாக இருந்தது. ஆனால் நாணயங்கள் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து பண்டமாற்று முறை மெதுமெதுவாக வழக்கத்தில் இருந்து மறைந்து போனது. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முடிவுக்கு வராத நிலையில், அதன் காரணமாக ஐரோப்பா முழுவதும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பொழுது நூதனமான பண்டமாற்று முறை மீண்டும் அங்கே நடைமுறைக்கும் வந்துள்ளது.  … Read more

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்  3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பொதுமக்களில் துப்பாக்கி வைத்திருந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பதிலுக்குச் சுட்டார். இதில் அந்த மர்ம நபரும் உயிரிழந்தார். இதனால், இந்த துப்பக்கிச்சூட்டில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் … Read more

செய்திகளின் அசல் உள்ளடகத்திற்கான பலனை தொழில்நுட்ப நிறுவனங்கள் கொடுக்குமா

புதுடெல்லி: சர்வதேச அளவில் பிரபலமானபெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்ளூர் டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் விளம்பர வருவாயில் நியாயமான பங்கை செலுத்தும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நீண்டநாளாக ஆலோசிக்கப்பட்ட விஷயம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ​​அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், அதன் பயனை சொற்பமாக பெறும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கங்கள் மூலம் பெரும் லாபத்தை  ஈட்டுகின்றன இது தொடர்பாக, இந்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். … Read more

இலங்கையில் மீண்டும் அவரச நிலை: பிரகடனம் செய்தார் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் மீண்டும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (2022, ஜூலை 17) பிற்பகுதியில் இந்த அறிவிப்பு வெளியானது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், மக்களின் அடிப்படைத் தேவையான மருந்துகள், எரிபொருள், உணவு என அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்துமே விலை அதிகரித்தது. போராட்டங்கள், ஆட்சி மாற்றம், வன்முறை என அண்மை நாட்களாக சிக்கலின் உச்சியில் இருக்கும் இலங்கையின் … Read more