இலங்கையில் மீண்டும் அவரச நிலை: பிரகடனம் செய்தார் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் மீண்டும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (2022, ஜூலை 17) பிற்பகுதியில் இந்த அறிவிப்பு வெளியானது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், மக்களின் அடிப்படைத் தேவையான மருந்துகள், எரிபொருள், உணவு என அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்துமே விலை அதிகரித்தது. போராட்டங்கள், ஆட்சி மாற்றம், வன்முறை என அண்மை நாட்களாக சிக்கலின் உச்சியில் இருக்கும் இலங்கையின் … Read more

மிக ஆபத்தான 12 டன் சரக்குகளுடன் கிரீஸில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் சரக்கு விமானம்

கிரீஸ் சரக்கு விமானம் விபத்து: வடகிழக்கு கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். கிரேக்க அரசின் ஒளிபரப்பு நிறுவனமான ஈஆர்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் அன்டோனோவ் ஏ-12, (Antonov An-12) ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிக்கொண்டு பங்களாதேஷுக்குச் சென்று கொண்டிருந்தது. செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு பறந்து கொண்டிருந்த போது, ​​கிரீஸில் உள்ள பேலியோச்சோரி கிராமத்திற்கு அருகே விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறங்கும் … Read more

என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? அதிரவைக்கும் ஆய்வு

பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை கண்டறிய பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். தொலைதூர விண்மீன் திரள்களைத் தேடும் பிரம்மாண்ட செயற்கைக்கோள்கள் முதல் வானொலி ஒலிபரப்புகளை அண்டத்திற்கு அனுப்புவது வரை என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வளவு முயற்சித்தாலும், பெரிய அளவில் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தொடர்ந்து வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, இந்த பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் நம்மை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் … Read more

Uyghurs: சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி

பெய்ஜிங்: சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள், சீனாவின் பாரம்பரியத்தின் அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அரசு “இனப்படுகொலை” செய்வதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் சீன அதிபரின் சின்ஜியாங் பிராந்திய பயணமும், சீன பாரம்பரியத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நோக்கம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. வடமேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கிர்கிஸ்தான் … Read more

Wristwatch of Adolf Hitler: தங்க வாட்சா இருந்தாலும் இந்த விலை டூ மச் மிஸ்டர் ஹிட்லர்

அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வருகிறது. அடால்ஃப் ஹிட்லரின் 44வது பிறந்தநாளான ஏப்ரல் 20, 1933 அன்று தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள் கைக்கடிகாரம் அவருகு பரிசாக கிடைத்ததாக கூறப்படுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கைக்கடிகாரத்தை ஏலத்தில் விற்கிறது, இந்த கடிகாரத்தின் விலை $2 முதல் $4 மில்லியன் வரை விற்பனையாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.   இந்த சிறப்பான கைக்கடிகாரத்தில் … Read more

World Snake Day 2022: மருந்தாகும் பாம்பின் விஷம்; சில அரிய தகவல்கள்

பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும், மக்கள் மனதில் அவற்றைப் பற்றிய தவறான எண்ணங்களையும் நீக்குவதற்காக ஜூலை 16ம் தேதி உலக பாம்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாம்புகளை பற்றி பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை . ஒருபுறம் நாம் பாம்புகளுக்கு மிகவும் பயப்படுகிறோம். மறுபுறம் அதனை கடவுளாகவும் வணங்குகிறோம். பூமியில் 3,000 க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து தவிர எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த அனைத்து உயிரினங்களிலும், … Read more

கட்டிப்படிக்க 7,100 ரூபாய் கட்டணம் – கட்டிப்பிடி வைத்தியத்தை தொழிலாக மாற்றிய இளைஞர்

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் வசூல்ராஜா MBBS. இந்தப் படத்தில் கமல் ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் என்ற முறையை பிரபலப்படுத்தினார். யாரேனும் சிடுசிடுவென்றோ, விரக்தியாகவோ இருந்தால் அவர்களை கமல் கட்டிப்பிடிப்பார். அப்போது அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றி சாந்தமாவது போல் காட்சிகள் இருக்கும். சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் யாரேனும் ஒருவர் மற்றொருவரை கட்டிப்பிடித்தால் நேர்மறையான எண்ணங்களே தோன்றும். தற்போது இந்த விஷயம் பல நாடுகளில் பரவி வருகிறது. மசாஜ், ஸ்பா போன்று … Read more

Existence of Aliens: ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துகிறதா ரேடியோ சிக்னல்

பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் நமக்குத் தெரியாது. இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. வேற்று கிரகவாசிகள் என்னும் ஏலியன்கள் (அவை இருந்தால்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்ற அனுமானங்களும் நம்ப்பிக்கைகளும் அதிக அளவில் உள்ளன. விஞ்ஞான அடிப்படையிலான தேடல்களும் அவை கொடுக்கும் நம்பிக்கைகளும் ஏலியன்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. இருந்தாலும், இன்னும் அறுதியான இறுதி முடிவுகளை ஏலியன்கள் ஆராய்ச்சி இதுவரை கொடுக்கவில்லை. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது பணியை தொடங்கிய நிலையில், அந்த அற்புத தொலைநோக்கி … Read more

பிரிட்டனின் ‘அத்திப்பட்டி’; மாயமான கிராமத்தை வெளிகொணர்ந்த வெப்பம்

உலகின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.  பிரிட்டனில் கடும் வெப்பத்தினால், அங்குள்ள ஒரு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்த பிறகு, 17 ஆம் நூற்றாண்டின் பழமையான கிராமத்தின் இடிபாடுகள் இப்போது தென்படுகின்றன. ‘வெஸ்ட் எண்ட்’ என்பது ஒரு சிறிய கிராமமாகும்,  சுமார் 400 அண்டுகள் பழமையான இந்த கிராமம் 1966 ஆம் ஆண்டில்  நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.   வெப்பநிலை அதிகரித்துள்ளதன் காரணமாக … Read more

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபரின் பயணம்: ஜோ பிடன் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் சவுதி அரேபிய பயணத்தின்போது பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக கேள்வி எழுப்பியது சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் தற்போதைய செளதி அரேபியப் பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தனது ராஜாங்க ரீதியிலான பயணத்தின்போது சந்தித்த ஜோ பிடன்,  2018 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக சில கேள்விகளையும் கேட்டுள்ளர். அமெரிக்க அதிபரின் செளதி அரேபிய … Read more